இந்தியாவில் முதன் முதலாக ஒரே துணியில் நெய்யப்பட்ட தேசியக் கொடி - வீட்டை விற்று சாதனை படைத்த நபர்!
- Get link
- X
- Other Apps
8×12 அளவில் 4 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்தியாவில் முதல் கையில் ஒரே துணியில் எந்த வித இணைப்பும் இன்றி நெய்த தேசியக் கொடியை உருவாக்கியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சத்திய நாராயணன் என்ற நபர் தனது சொந்த வீட்டை விற்று 6.5 லட்சத்தில் இந்தியாவின் முதன் முதலாக ஒரே துணியில் நெய்த தேசியக் கொடியை உருவாக்கியுள்ளார்.
இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஒரே துணியில் உருவாக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்க வீட்டை விற்ற அந்த நபர் ஒரு நெசவாளியாக மட்டும் இல்லாமல் இந்தியக் குடிமகனாகவும் பெருமை சேர்த்துள்ளார். அவர் நெய்த அந்த தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட வேண்டும் என்பது அவரின் கனவாக உள்ளது.
ஆந்திர மாநிலம் வேமாவரம் கிராமத்தில் வசிக்கும் இவர் 2016 இல் லிட்டில் இந்தியர்கள் என்ற படத்தைப் பார்த்துள்ளார். அதில் தேசியக் கொடியை உருவாக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதே போல் தானும் செய்ய வேண்டும் என்று எண்ணி அதனைக் கனவாக மாற்றினார் சத்திய நாராயணன். ஒரே துணியில் தேசியக் கொடியை நெய்து அதனை செங்கோட்டையில் பறக்க விட முயன்ற அவருக்கு முதற் கட்டத்தில் தோல்வியே கிடைத்தது. செங்கோட்டையில் பறக்க விடும் அளவிற்குப் பெரிய அளவிலான கொடியை ஒரே துணியில் செய்வது என்பது கடினமாகவே இருந்தது.
அந்த சமயத்தில் அவர் சேலை கடையில் வடிவமைப்பாளராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது சேலைகளை எடுத்துக்கொண்டு போகும்போது ஏற்பட்ட விபத்தில் தலா 15,000 ரூபாய் மதிப்புள்ள 80 சேலைகள் கீழே விழுந்து நாசமாகிவிட்டது. அதனால் அவர் கடனில் மூழ்கிவிட்டார். அப்படியும் தனது கனவை விடாமல் தனது சொந்த வீட்டை விற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியும் 6.5 லட்ச ரூபாய் செலவில் 8×12 அளவில் 4 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்தியாவில் முதல் கையில் ஒரே துணியில் எந்த வித இணைப்பும் இன்றி நெய்த தேசியக் கொடியை உருவாக்கியுள்ளார்.
இதனைப் பற்றி அவர் தெரிவிக்கையில், இந்த தேசியக் கொடியை உருவாக்கியது மிகவும் கடுமையான செயலாக இருந்தது. குறிப்பாக அசோக சக்கர பகுதி பல முறை சரி வராமல் இருந்தது. 4 ஆண்டுகள் உழைப்பில் தற்போது இதனை முடிக்க முடிந்தது என்று கூறினார்.
வெற்றிகரமாகக் கொடியை உருவாக்கிய பின்பு அதனை வெளிப்படுத்தச் சரியான வழி தெரியாமல் இருந்துள்ளார். அப்போது 2019இல் விசாகப்பட்டினத்திற்குப் பிரதமர் மோடி வந்திருந்தார். அவரை சந்திக்கும் வாய்ப்பு சத்திய நாராயணனுக்குக் கிடைத்தது. பிரதமர் மோடி சத்திய நாராயணன் செய்த கொடியை ஏற்றினார். இன்னும் அவர் நெய்த தேசியக் கொடி செங்கோட்டையில் பறக்கப்படவில்லை என்றாலும் தனது கனவை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment