நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மிட்டாய் சுவைக்க கோடிகளில் சம்பளம்! கனடாவில் ஓர் வினோத வேலை......

 கனடாவில் நிறுவனம் ஒன்று வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பால் மக்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிபோயுள்ளனர்.

ஆம், சுவையான மிட்டாய்களை சுவைப்பதற்காக தலைமை மிட்டாய் அதிகாரிகளை தேடி வருகிறார்களாம், இதற்காக அவர்கள் வழங்கும் சம்பளமோ  கோடிகளை தொடுகிறது.

Candy Fun House என்ற கனேடிய நிறுவனத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தலைமை மிட்டாய் அதிகாரியின் வேலையே சாக்லேட் பார்கள் முதல் மிட்டாய்கள் வரை பலவிதமான மிட்டாய்களை சுவைத்து சொல்ல வேண்டும், இதற்கு முதல் தகுதியே 5 வயதை பூர்த்தி செய்திருந்தால் போதும்.

இதற்காக நிறுவனம் அவருக்கு 78,000 டாலர்கள் முதல் 100,000 டாலர்கள் வரை சம்பளமாக வழங்குகிறது.

ஜூலை மாதம் வெளியான இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2022.




also read : 42 அடியில் நகம்... கின்னஸ் சாதனை படைத்த பெண்ணின் உருக்கமான சபதம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்