தித்திக்கும் தேங்காய் அல்வா...ரிச் சுவையில் செய்து அசத்தலாம்!
- Get link
- X
- Other Apps
தித்திக்கும் தேங்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- பெரிய தேங்காய் - 2
- பச்சரிசி - அரை ஆழாக்கு
- நெய் - ஒரு கரண்டி
- முந்திரிப் பருப்பு - 12
- தூள் வெல்லம் - 2 ஆழாக்கு
- ஏலக்காய் - தேவையான அளவு
செய்முறை
தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள். முழு முந்திரிப் பருப்பை தேவைப்பட்டால் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல ஏலக்காயை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். முடிந்தால் முன்னமே மொத்தமாகப் பொடியாக்கி கூட வைத்துக் கொள்ளலாம்.
பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் கல் நீக்கி நன்றாக களைந்து விடவும்.
பிறகு துருவிய தேங்காயையும், அரிசியையும் மிக்சியில் அரைத்து நன்றாக வெண்ணை போல விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் நீங்கள் மிக்சியில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து உடன் வெல்லத் தூளையும், ஏலக்காயையும் போட்டு சுருள் வரும் வரையில் பொறுமையாக நன்றாகக் கிளறவும்.
இப்போது நன்கு சுருள் வந்தவுடன் நெய்யை விட்டு, முந்திரியையும் வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும். சுவையான தேங்காய் அல்வா ரெடி.
ALSO READ : வாழைத்தண்டு பொரியல் சுடச் சுட செய்வது எப்படி! பத்தே நிமிடத்தில் ரெடி....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment