திடீரென பிளாஸ்டிக் போல் மாறிய பெண்ணின் முகம் - பிறகு பாம்பு தோல் போல உரிந்த அதிர்ச்சி...
- Get link
- X
- Other Apps
30 நிமிடம் வெயிலில் உறங்கிய பிரித்தானியா பெண்ணின் நெற்றியில் தோல் பிளாஸ்டிக் போன்று மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான சிரின் முராத் பல்கேரியாவில் விடுமுறையில் இருந்தபோது, 21 டிகிரி செல்சியஸ் சூரிய ஒளியில் சன்ஸ்கிரீன் இல்லாமல் தூங்கியுள்ளார்.
அவர் தூங்கி எழுந்த போது அவரது சிறிது காயங்களுடன் சிவந்து காணப்பட்டுள்ளது.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓய்வெடுத்துள்ளார். அடுத்த நாள் அவரது தோல் மிகவும் இறுக்கமாக மாறி புருவங்களைச் சுருக்கும்போது அது பிளாஸ்டிக் போலத் தெரிந்துள்ளது.
பிறகு தோல் பயங்கரமாக காயமானது பற்றி தனது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பின்னர், மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார். ஏனெனில் அது இன்னும் மோசமாகிவிடும் என்று அவர் நினைக்கவில்லை.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முகம் முழுவதும் பாம்பு தோல் போல உரிக்கத் தொடங்கியுள்ளது.
அடுத்த நாள் வலித்துள்ளது. ஆனால் அது உரிக்கத் தொடங்கியபோது கொஞ்சம் நிவாரணம் கிடைத்துள்ளது.
சன்ஸ்கிரீனின் முக்கியத்துவம்
வலிமிகுந்த இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, முராத் இப்போது சன்ஸ்கிரீனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் ஆர்வமாக உள்ளார்.
"நீங்கள் நன்றாக இருப்பீர்கள் அல்லது உங்கள் சருமம் எரியாமல் இருக்கும் என்று நீங்கள் எவ்வளவு நினைத்தாலும், எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்!" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த மாதம் நடந்தது, இப்போது முராத்தின் கன்னங்களில் சில புள்ளிகள் மட்டும் நிறமாற்றத்துடன் காணப்படுகிறது.
இருப்பினும், இது அவருக்கு எதிர்பாராதவிதமாக மிகவும் மோசமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கடுமையான வெயிலால் மெலனோமாவின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோயாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.
ALSO READ : ஓட ஓட துரத்திய உலகின் மிகக் கொடிய பறவை.. உயிர் தப்பிய திக் திக் வீடியோ!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment