நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கத்தரிக்காயை இனி ஒதுக்கிவைக்காதீங்க! இந்த நன்மைகளை உங்களுக்கு வாரி வழங்குமாம்...

 பொதுவாக ஒவ்வொரு காய்கறியும் தனித்துவம் வாய்ந்த சத்துக்கள் நிறைந்ததாக இருக்கின்றன.

இருப்பினும் சில காய்கறிகளை பலரும் சாப்பிட விரும்புவதில்லை. அதில் ஒரு காய்கறி தான் கத்தரிக்காய்.

கத்தரிக்காயை பெரும்பாலான மக்கள் உணவில் இருந்து ஒதுக்கி விடுவார்கள்.

உண்மையில் கத்தரிக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளது. தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம். 


  • நமது மூளை செயல்திறனைஅதிகரிப்பதோடு செல்களின் மெம்பிரேன்களைப் பத்திரமாக காத்துக்கொள்வது மட்டுமில்லாமல் நல்ல நினைவாற்றலையும் நமக்கு அளிக்க உதவுகிறது.

  •  தினமும் நீங்கள் உட்கொள்ளும் போது எலும்புகளுக்கு ஆரோக்கியத்திற்கு அளிக்கிறது.

  •  உங்களது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தை சமன் செய்வது முதல் உறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களிலிருந்து நம்மை பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது.

  •   இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. மேலும் தொடர்ந்து நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போதுஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடல் சோர்வு இல்லாமல் இருப்பதற்கு உதவியாக உள்ளது.

  • கத்தரிக்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

  •   உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் சத்துக்களால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. 

  •  தூக்கமின்மை மற்றும் பிற தூக்கக் கோளாறுகளை குணப்படுத்த கத்தரிக்காயை சாப்பிடலாம். 
  •   நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்