நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலை உணவுக்கு கொண்டைக்கடலை சாலட் ரெசிபி...

 கொண்டக்கடலையை வெகு எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். சுமார் 6 முதல் 8 மணி நேரம் கொண்டக்கடலையை ஊற வைத்து, வெறும் உப்பும், தண்ணீரும் சேர்த்து அவித்து சாப்பிட்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.


நம்முடைய உணவுப் பட்டியலில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்ற பொருட்களில் கொண்டக்கடலைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொண்டக்கடலையை வெகு எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். சுமார் 6 முதல் 8 மணி நேரம் கொண்டக்கடலையை ஊற வைத்து, வெறும் உப்பும், தண்ணீரும் சேர்த்து அவித்து சாப்பிட்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.

அதே சமயம், கொண்டக்கடலையுடன் சில பச்சைக் காய்கறிகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.

கொண்டக்கடலை அவகோடா சாலட்

தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை - 1 கப்

வெள்ளரிக்காய் - 1/2 கப் (துண்டுதுண்டாக நறுக்கியது)

தக்காளி - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)

அவகோடா - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)

வெங்காயம் - 1/2 கப்

கொத்தமல்லி - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு


செய்முறை

கொண்டக்கடலையை ஊற வைத்து, பின்னர் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை இதனுடன் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது அவகோடா பழ துண்டுகளையும் சேர்த்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி, இறுதியாக எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடவும்.

கொண்டக்கடலை தக்காளி வெள்ளரிக்காய் சாலட்

கொண்டக்கடலை - 1 கப்

தக்காளி -1 (துண்டுதுண்டாக நறுக்கியது)

வெள்ளரிக்காய் - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை

கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் கொண்டக்கடலை மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் கலக்கவும். நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை சேர்க்கவும். தேவைக்கேற்றபடி உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிக சுவை வேண்டும் என்றால் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

கொண்டக்கடலை பாலக்கீரை சாலட்

கொண்டக்கடலை -1 கப்

பாலக்கீரை - 1/2 கப் (துண்டுதுண்டாக நறுக்கியது)

வெள்ளரிக்காய் - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)

எலுமிச்சை சாறு - 2ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்

சீரகத்தூள் - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய் விதைகள் - தேவையான அளவு


செய்முறை

ஊறிய கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய பாலக்கீரையுடன் இதனை மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனுடன் தேன், எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

இப்போது தேவைக்கேற்ப சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். காரம் தேவையென்றால் மிளகாய் விதைகளை தூவி விடலாம்.

வினிகர் மஸ்டர்ட் கொண்டக்கடலை சாலட்

கொண்டக்கடலை - 1 கப்

வெங்காயம் - 1/2 கப் (துண்டுதுண்டாக நறுக்கியது)

தக்காளி - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)

வெள்ளரிக்காய் - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)

கொத்தமல்லி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு

வினிகர் - 1 ஸ்பூன்

கடுகு எண்ணெய் - 2 ஸ்பூன்


செய்முறை

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வினிகர், பூண்டு, கடுகு எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். சிறிது நேரம் அப்படியே ஊற விடவும். இதனுடன் கொத்தமல்லி மற்றும் தக்காளி ஆகியவற்றை எடுத்து அலங்கரித்து வைக்கவும். புளிப்புச் சுவை தேவை என்றால் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!