ஊழியரை சேஸிங் செய்யும் ராட்சத முதலை; பதைபதைக்க வைக்கும் வீடியோ.......
- Get link
- X
- Other Apps
பூங்கா ஒன்றில் ஊழியர் ஒருவரை முதலை சேஸிங் செய்யும் வீடியோ வெளியாகி பதைபதைக்க வைக்கிறது.
- ஊழியரை சேஸிங் செய்யும் முதலை
- இணையத்தில் வைரலான வீடியோ.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்களால் இணையம் நிரம்பி வழிகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பதற்கு வசீகரமாகவும், பயமாகவும் இருக்கும். அப்படியான ஒரு வீடியோ சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. அது பகிரப்பட்டதிலிருந்து, பேஸ்புக்கில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறியிருக்கிறது. அப்படி என்ன சுவாரஸ்யம் என்றால், பூங்கா ஒன்றில் இருக்கும் ராட்சத முதலை ஒன்று அங்கிருக்கும் பூங்கா ஊழியர்களை சேஸிங் செய்கிறது. இந்த காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
இந்த வீடியோ Gatorland Orlando-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் 110- ஏக்கரில், ஆயிரக்கணக்கான முதலைகள் வளர்க்கப்படுகின்றன. ராட்சத முதலைகள் இருக்கும் இந்த பூங்காவை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிடலாம். அதுமட்டுமில்லாமல் பூங்காவில் பறவைக் கூடம், செல்லப்பிராணி பூங்கா ஆகியவற்றுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
வீடியோவில் இருக்கும் முதலை, கியூபா முதலை ஆகும். சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோ 11,000 முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. 8,100 லைக்குகளையும் நெருங்கியுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் "அப்படி ஒரு முதலையை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் ! என தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு பெரிய ராட்சத முதலையை இதுவரை பார்த்ததில்லை எனக் கூறியிருக்கும் நெட்டிசன், அது தாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ALSO READ : கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment