நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

படுத்தவுடன் தூக்கம் வேண்டுமா? இப்படி செய்தால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.....

 தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் அடுத்த நாள் முழுவதும் உற்சாகம் இழந்து காணப்படலாம்.


* மன அழுத்தம், பிரச்சனை போன்றவைகளுக்கு இடம்கொடுக்காமல் நிம்மதியாக உறங்குவது முக்கியம்

ஒரு சமயத்தில் வயதானவர்களுக்கு மட்டும் தான் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். ஆனால் தற்போதெல்லாம் இளைய தலைமுறையும் அந்த சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

தூக்கமின்மைக்கு முதல் காரணம் நீங்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் தான் என்றால் அது மிகையாகாது. இன்று செல்போனால் நிறைய பேருக்கு தூக்கம் என்பது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் நாள் முழுவதும் உற்சாகம் இழந்து, செய்யும் செயலில் முழுமையான ஈடுபாட்டை காண்பிக்க முடியாமல் போய் விடுகிறது.

படுத்த உடனேயே சிலருக்கு எல்லாம் தூக்கம் எப்படி தான் வருகிறது என்று நாம் பலமுறை பொறாமை பட்டு இருப்போம். அது போல் நாமும் படுத்தவுடனே எப்படி தூங்குவது?

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் வந்துவிடும்.

வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை தர வல்லது. முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வந்துவிடும்.

தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் நல்ல உறக்கத்தை பெறலாம்.

வேப்பிலையை எடுத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து அதை தலையில் வைத்து உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.


முக்கிய குறிப்பு: மன அழுத்தம், பயம், பதட்டம், எதிர்கால பயம் என பல விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் தூக்கம் தடைபடும். இதை மனதளவில் அணுக வேண்டிய விஷயம் என்பதால் இதை அப்படியே விடாமல் உளவியல் நிபுணர், மனநல ஆலோசகரை அணுகி தீர்வு காணுதல் அவசியம். தூக்கமின்மையால் இரவுகளை தொலைக்காதீர்கள். 



ALSO READ :

கரு கருனு தலைமுடி வளர வேண்டுமா? இதோ சில எளிய டிப்ஸ்!



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்