நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே அதிகமான பெண் விமானிகள்.... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய இந்தியா!

 உலக அளவில் இருக்கும் ஒட்டுமொத்த விமானிகளின் எண்ணிக்கையில் பெண் விமானிகளின் பங்கு, உலக சராசரியை விட இந்தியாவில் கணிசமாக அதிகரித்து இருப்பதாக சமீபத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளதால் இந்திய விமானப் போக்குவரத்து துறை பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை தொற்று பரவுவதற்கு முன் இருந்த இயல்பு நிலைகளை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து விமானிகளுக்கான தேவை இந்தியாவில் கணிசமாக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில் உலகின் எந்த நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான பெண் விமான பைலட்டுகள் இருக்கின்றனர் என்ற தகவல் அனைத்து தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மானிய கோரிக்கைகளுக்கு பதிலளித்து மக்களவையில் இது தொடர்பாக பேசிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், உலக அளவில் 5% விமானிகள் மட்டுமே பெண்கள், ஆனால் இந்தியாவில் பெண் விமானிகளின் பங்கு 15 சதவீதத்திற்கும் அதிகம் என்றார்.


கடந்த 20-25 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம் இருப்பது என்பது நம் நாடு பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறி உள்ளார் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.

வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 220 புதிய விமான நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொற்று நேரத்திலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களில் இந்தியா முன்னேறியுள்ளது என்றார். வரும் நாட்களில் புதிய தொழில்நுட்பத்துடன் பைலட் லைசன்ஸ் பெறுவது எளிமைப்படுத்தப்படும், விமானிகளுக்காக 15 புதிய விமானப் பயிற்சி பள்ளிகளை அமைக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் தெரிவித்து உள்ளார்.


உலகின் மிக பெரிய விமானச் சந்தையான அமெரிக்காவில் 5.5% மற்றும் இங்கிலாந்தில் 4.7% மட்டுமே விமானிகளில் பெண்களாக உள்ளனர். அதாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மிகவும் பெரிய விமான சந்தைகள் உட்பட, உலகின் வேறு எந்த நாட்டை ஒப்பிடும் போது, கமர்ஷியல் மற்றும் ஏர் ஃபோர்ஸ் பெண் விமானிகளின் விகிதத்தில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. இதனிடையே கடந்த 2020-ல் சர்வதேச மகளிர் ஏர்லைன் பைலட் சங்கம் தொகுத்துள்ள தரவுகளின்படி, மற்ற நாடுகளை விட 12.4 சதவீத கமர்ஷியல் பெண் விமானிகளுடன், உலகிலேயே அதிக பெண் விமானிகளின் விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. 9.9% பெண் விமானிகளுடன் அயர்லாந்து இரண்டாமிடத்தில் இருந்தது.

இந்தியாவில் சரக்கு விமான நிறுவனங்களில் பணியாற்றும் விமானிகளில் 8.5% பேர் பெண்கள் ஆவர். தென்னாப்பிரிக்கா 9.8 சதவீதத்துடன் அதிக பெண் விமானிகள் பட்டியலில் 3-வது இடத்திலும், கனடா 6.9 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 6.9 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளது. மறுபுறம் முன்னர் நாம் பார்த்தப்படி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் முறையே 5.4 மற்றும் 4.7 சதவீத பெண் விமானிகள் உள்ளனர்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!