நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வு தரும் தூதுவளை சூப் - 5 நிமிடத்தில் ரெடி...

 தூதுவளை கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது.இதனை அடிக்கடி  நெயில் வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி நீங்கும்.

அதே போல தூதுவளை கீரையில் சூப் செய்தும் பருகலாம்.

தேவையான பொருட்கள்

  1. தூதுவளை இலைகள் - 10
  2.  பூண்டு - 5 பல்
  3. தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை
  5.  கொத்தமல்லித்தழை
  6. புதினா - தலா 
  7. கைப்பிடியளவு உப்பு
  8. மிளகுத்தூள் - தேவைக்கு
  9. துளசி இலைகள் - சிறிதளவு
  10. எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
  11. தோலுரித்த சின்ன வெங்காயம் - 10

செய்முறை

சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்