DIY Eyeliner | கோகோபவுடர் ஐலைனர், சார்கோல் ஐலைனர், பாதாம் ஐலைனர், பீட்ரூட் ஜூஸ் ஐலைனர் போன்ற வீட்டிலேயே எவ்வித கெமிக்கல் இல்லாமல் தயாரிக்கும் இயற்கையான ஐலைனரை வைத்துக் கண்களை அலங்கரிக்கலாம்.
பெண்கள் என்றாலேயே அழகான முகத் தோற்றம், வசீகரிக்கும் கண்கள் என அவர்களின் அழகை அடுக்கிக் கொண்டே போகலாம்.. இதற்கேற்றால் போல், பெண்களும் தங்களை அழகாக வைத்துக்கொள்வதற்கு பல விதமான ப்யூட்டி டிப்ஸ்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆரம்பத்தில் கண்களுக்கு கண் மை இடும் பழக்கம் பெண்களிடம் அதிகளவில் இருந்தது. மாறி மாறி வரும் டிரெண்டிங்கிற்கு ஏற்ப தற்போது பெண்கள் தங்கள் கண்களின் அழகை அதிகரிக்க காஜல், ஐலைனர், மஸ்காரா போன்ற கண்களுக்காக உள்ள பிரத்யேக அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்.
பெண்களை கவரும் விதமாக பல வண்ணங்களில் கிடைத்தாலும் எல்லாவற்றிலும் நிச்சயம் கெமிக்கல் கலந்திருக்கும். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியமாக இயற்கையான முறையில் கெமிக்கல் இல்லாத ஐலைனரை வீட்டிலேயே செய்யலாம்.. நம் சமையல் அறையில் கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்து எப்படி? ஐலைனர் தயாரிக்கலாம் என இங்கே தெரிந்து கொள்வோம்.
கோகோ பவுடர் ஐலைனர்: கருப்பு நிற ஐலைனரை பயன்படுத்தி நிச்சயம் அனைவருக்கும் கொஞ்சம் சலிப்பாக இருக்கும். கொஞ்சம் வேறு கலர்ல ஐலைனரைப்பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் கோகோ பவுடர் ஐலைனரைத் தேர்வு செய்யலாம். பிரவுன் கலரில் உங்களது கண்களுக்கு புதுவிதமாக லுக்கை கொடுக்கும் இந்த ஐலைனரை நீங்களே வீட்டில் எளிமையாக தயார் செய்துவிடலாம். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கோ கோ பவுடரை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் அல்லது ரோஸ் பவுடர் சேர்த்து ஜெல் போன்று வரும் வரை நன்றாக கலக்க வேண்டும். இப்போது பிரவுன் கலரில் கோகோ பவுடர் ஐலைனர் ரெடியாகிவிட்டது. இதை மேல் மற்றும் கீழ் இமைகளில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப போட்டு கொண்டு இயற்கையாக அழகைப் பெறலாம்.
பீட்ரூட் ஜூஸால் செய்யப்பட்ட ஐலைனர்: கருப்பு நிறத்தில் இல்லாமல் விதவிதமான கலர்களில் ஐலைனரைப் பயன்படுத்த விரும்பும் பெண்கள் பீட்ரூட் ஜூஸால் செய்யப்பட்ட ஐலைனர் பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் மற்றவர்களிடம் இருந்து உங்களைத் தனித்துக்காட்டும். இதை செய்வதற்கு முதலில், அரை பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர் பீட்ரூட்டின் சாறை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும். இரண்டையும் பேஸ்ட் போன்று வரும் வரை நன்றாக கலக்க வேண்டும். இப்போது இளஞ்சிவப்பு கலரில் உங்களுக்கு ஐலைனர் கிடைக்கும்.
சார்கோல் ஐலைனர் (Charcoal): சார்கோல் பவுடரைக்கொண்டு நீங்கள் வித்தியாசமாக ஐலைனரைத் தயார் செய்யலாம். முதலில் சார்கோல் பவுடரை நன்றாக தண்ணீர் ஊற்றி காய்ச்சிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள அழுக்குகளையெல்லாம் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் கெட்டியான பதம் வரும் வரை காய்ச்சியினால் சார்கோல் ஐலைனர் உங்களுக்கு கிடைக்கும். இதேப்போன்று பாதாம் பருப்பு மற்றும் பாதாம் எண்ணெய்யில் தயாரிக்கப்படும் பாதாம் ஐலைனர், குங்குமப்பூ மற்றும் குங்குமத்தைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் குங்கும ஐலைனர் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது வித்தியாசமாக தெரிந்தாலும் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. குறிப்பாக கண்களுக்கு பயன்படுத்துவதால் எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி நீங்கள் உபயோகிக்கலாம்.
Comments
Post a Comment