நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹேர் கலரிங் செய்துள்ள முடியை எப்படி பராமரிக்க வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்...

 ஹேர் கலரிங் செய்வதை விட அதனை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித்துவமான கவனிப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் உள்ளன.


இப்போதெல்லாம் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் ஹேர் கலரிங் கலச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஹேர் கலரிங் செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதுவும் தற்போது கெமிக்கல் இல்லாத ஆர்கானிக் கலர்கள் கிடைப்பதால், இளம் பெண்கள் மத்தியில் ஹேர் கலரிங் செய்து கொள்ளும் பழக்கம் அதிகமாகிவிட்டது.

இந்தியாவை பொறுத்தவரை ஹேர் கலரிங் மார்க்கெட், 2020ம் ஆண்டில் 477 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது. CAGR கணிப்பு படி 2026ம் ஆண்டு இதன் மதிப்பு மேலும் 17 சதவீதம் அதிகரிக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல், வாழ்க்கை முறை, ஹேர் ஸ்டைல் மீது அதிகரித்து வரும் மோகம், அடுத்தடுத்து அப்டேட் ஆகி வரும் சலூன் மற்றும் ஸ்பாக்களின் சேவை ஆகியவை இதற்கு சாத்தியமான காரணிகளாக உள்ளன.

உலகிலேயே இந்தியா மிகப்பெரிய ஃபேஷன் சந்தையாக பார்க்கப்படுகிறது. ஏராளமான மக்கள் தொகையை கொண்டுள்ளதால், பிரபலமான பியூட்டி பிராண்ட்கள் பலவும் தங்களது சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன. ஹேர் கலர் தயாரிப்பாளர்கள், கஸ்டமர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.


இளம் பெண்கள் முதல் வயதான பெண்மணி வரை ஹேர் கலரிங் செய்து அசத்தி வரும் இந்த சமயத்தில், முடியின் நிறத்தை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கீழே கொடுத்துள்ளோம்.

- கெமிக்கல் கலந்த ஹேர் கலரிங் டைகள் பல மாதங்கள் நீடிக்கும் என்றாலும், அதனை ஹேர் கலரை பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்களுக்கு அலர்ஜி உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும்.

- பர்மனென்ட், செமி பர்மனென்ட், ப்ரீ-லைட்டனர்கள் மற்றும் ஒருநாள் மட்டுமே நீடிக்க கூடிய டெம்பரவரி ஹேர் கலரிங் என எந்த வகையான ஹேர் கலரிங் முறையை தேர்வு செய்தாலும் அம்மோனியா இல்லாத நிரந்தர வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் நீங்கள் செய்யக்கூடிய ஹேர் கலர் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், முடியை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

- ஹேர் கலரிங் செய்வதை விட அதனை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும்ன் தனித்துவமான கவனிப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் உள்ளன. உங்கள் ஹேர் கலருக்கு ஏற்ற ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் மாஸ்க் மற்றும் லீவ்-இன் கண்டிஷனர்களை பயன்படுத்துவது அவசியம்.


- சில வகையான ஹேர் கலர்கள் முடிக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். எனவே சுருள் முடி என்றால், பாரபென் இல்லாத ஷாம்பூ பயன்படுத்துவது. குறைந்தது 6 மாதத்திற்காகவது அம்மோனியா இல்லாத ஷாம்புக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். .

- ஹேர் கலரிங் சிகிச்சை அதிகப்படியான ரசாயனங்களைக் கொண்டிருப்பதால், முடியை கலர் செய்த பிறகு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக சருமம் மற்றும் ஹேர் கேர் நிபுணர்களை அல்லது மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் ஒவ்வொருடைய முடிக்கும் தனிப்பட்ட பராமரிப்பு தேவைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் தேவைப்படுகிறது.

- வாரந்தோறும் முடிக்கு ஹேர் மாஸ்க் அப்ளே செய்வது சேதத்தில் இருந்து பாதுகாக்கும். அதன் பின்னர் தலையை நன்றாக அலசிய பிறகு, முடிக்கு லீவ்-இன் கண்டிஷனரைப் பூசுவது நல்ல பலன் கொடுக்கும்.

ஒவ்வொரு வகையான முடி நிறமும் அதன் சொந்த வழியில் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், ஹேர் கலரிங் முறை, பராமரிப்பு, முடி தொடர்பான சிக்கலைத் தடுக்க கூடிய சிகிச்சை முறைகள் ஆகியவற்றை நன்றாக அறிந்து கொண்டே பிறகே ஹேர் கலரிங் செய்ய முடிவெடுங்கள்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!