நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலை உணவுக்கு சூப்பர் உணவுகள்! நாள் முழுவதும் சுறுப்பாக வைக்கும் Super Foods....

 Super Foods for Breakfast: காலை உணவு நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு, அன்றைய தினத்தின் நமது சுறுசுறுப்புக்கு ஆதாரமாக இருக்கும். 


பரபரப்பான நமது வாழ்க்கை முறையால், காலையில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரியவில்லை. இந்த மூன்று பொருட்களால் செய்த உணவு காலை உணவுக்கு உகந்தது.

பலர் காலையிலேயே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவார்கள். இவை ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் சிலவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இவை நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்: காலையில் ஆரோக்கியமான காலை உணவை விரும்பினால், வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட் ஒரு நல்ல தேர்வாகும். இரண்டு ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்துக் கொள்ளவும். அதில் சியா விதைகள், நறுக்கிய வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும். ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய பிரெட் டோஸ்ட் ரெடி

கொண்டைக்கடலை புரதத்தின் நல்ல மூலமாகும், எனவே ஆரோக்கியமான காலை உணவில் கடலை சேர்த்துக் கொள்வது நல்லது. கடலை மாவில் பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், உளுத்தம் மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கெட்டியான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த மாவில் செய்யப்படும் தோசை உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

புரோட்டீன் ஷேக் எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும். 25 கிராம் புரத தூள், பால், நறுக்க்கிய பழங்கள், பாதாம் மற்றும் பிஸ்தாவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஆளி விதைகள் அல்லது சியா விதைகளையும் சேர்த்தினால் மேலும் அதிக ஆரோக்கியமான நாளுக்கு உத்தரவாதம் கொடுக்கலாம். பாலில் புரத தூளை கலக்கவும். அதில் மீதமுள்ள அனைத்து பொருட்களை கலக்கினால் உங்கள் பவர் பூஸ்டர் தயாராக உள்ளது.



ALSO READ : உடல் எடையை இருமடங்கு வேகத்தில் குறைக்கனுமா? இந்த பொருளை இப்படி பயன்படுத்தினால் போதும்....


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!