மைதானத்திற்குள் நுழைந்து செல்லும் நீராவி ரயில் - பின்னணியில் ஒளிந்திருக்கும் சுவாரசியம்!
- Get link
- X
- Other Apps
கால்பந்தாட்டாத்தின் போது இரயில் ஒன்று மைதானத்திற்குள் நுழைந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்தே உலகில் பல வினோதமான விஷயங்கள் விளையாட்டில் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தற்போது விளையாட்டு உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒன்று நீராவி ரயில் தான். இது இணையத்திலும் தற்போது வைரலாகி வருகிறது.
மைதானத்திற்குள் ரயில்
அதன்படி, ஸ்லோவாக்கியன் மினோக்கள் டாட்ரான் சியர்னி பலோக் கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் சியர்னி ஹ்ரான் ரயில் பாதையால் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தில் எப்போதாவது ஒரு பழங்கால நீராவி ரயில் ஒன்று புகையுடன் மைதானத்திற்குள் செல்லும். இந்த பழைய நீராவி ரயிலானது கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இருந்து இயக்கப்படவில்லை.
இவை கடந்த 1909-ம் ஆண்டு இந்த சியர்னி ஹ்ரோன் இரயில்வே, ஃபாரஸ்ட் ரயில்வேயாக மரக்கட்டைகளை வெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டது.
அதன்பின் 1927ம் ஆண்டில், சியர்னி பலோக் மற்றும் ஹ்ரோனெக் இடையே இந்த இரயிலில் பயணிகள் போக்குவரத்து செய்ய அனுமதிக்கப்பட்டது.
ரயிலின் சுவாரசியம்
தொடர்ந்து கடந்த 1982-ல் இந்த ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சில ஆர்வலர்கள் இந்த ரயிலை சீரமைக்க எண்ணி இதனை பழுதுபார்த்து, சுற்றுலாப் பயணிகளுக்கான பாரம்பரிய ரயில்பாதையாக மீண்டும் திறக்கப்பட்டது.
அதேப்போல், 1914-ல் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, கால்பந்து மைதானம் இங்கு இல்லை. ஆனால் அதன் பின் அந்த கிராமம் படிப்படியாக வளர்ந்த பிறகு தான் இந்த மைதானம் கட்டப்பட்டது.
முக்கியமாக இந்த ரயில்வேயின் சிறப்பு என்னவென்று பார்த்தால் கால்பந்து மைதானத்தின் நடுவே செல்லும் உலகின் ஒரே ரயில் பாதை இதுதானாம்., அதனால் தான் இது தற்போது எல்லோராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment