நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த முதியவர் அமர்ந்திருப்பது வீட்டுக்கு உள்ளேயா? வெளியிலா? சரியா சொன்னால் நீங்க மாஸ்டர்தான்!

 Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தை நன்றாகப் பாருங்கள், இந்த முதியவர் வீட்டுக்கு உள்ளே அமர்ந்திருக்கிறாரா? அல்லது வெளியிலா? சரியாக கண்டுபிடித்து சொல்லுங்க என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.


ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரிந்து முடிவில்லா குழப்பத்தில் ஆழ்த்தும். முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில், கவிஞர் மருதகாசி எழுதிய,
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது”
இந்த தத்துவப் பாடல் மனித வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும்.


ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடை கான்பது என்பது, போலிகளுக்கு நடுவே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்தில் உள்ள முதியவர் வீட்டுக்கு உள்ளே இருக்கிறாரா? அல்லது வெளியே இருக்கிறாரா? என்று சரியாகக் கண்டுபிடித்து சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க மாஸ்டர்தான்.


இந்த படத்தை நன்றாகப் பாருங்கள், இந்த முதியவர் எங்கே அமர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? வீட்டுக்கு உள்ளேயா அல்லது வெளியிலா? சரியாக சொல்லுங்கள் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.


உண்மையில், இந்த மனிதர் வீட்டுக்கு உள்ளே அமர்ந்திருக்கிறாரா? இல்லை வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கிறாரா? என்றால், அவர் வீட்டுக்கு உள்ளே அமர்ந்திருக்கிறார். நீங்கள் சரியாக யூகித்து பதில் அளித்திருந்தால், உங்களுக்கு பாராட்டுகள். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்