Popcorn Price: பொது இடங்களில் 50 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்படும் பாப்கார்ன்கள் திரையரங்குகளில் மட்டும் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்பது திரையரங்கிற்கு செல்லும் ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது.
திரையரங்குகளில் பாப்கார்ன் விலை அதிகமாக விற்பனை செய்வது ஏன் என்பது தொடர்பாக பிரபல பிவிஆர் திரையரங்குகளின் தலைவர் அஜய் பிஜிலி விளக்கமளித்துள்ளார்.
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் திரையரங்கில் படம் பார்பது அனைவருக்கும் பிடித்த பொழுதுபொக்காகும். என்னதான் ஒடிடி (OTT) தளங்கள் பெருகினாலும் திரையரங்கில் வந்து படம் பார்ப்பது என்பது அலாதியான அனுபவம். ஆனால் சமீப காலத்தில், திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் தின்பண்டங்களின் விலைகள் அதிகமாக இருப்பதாக, குறிப்பாக வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மக்களிடமிருந்து குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கின்றது.
ஒவ்வொரு திரைப்பட பார்வையாளர்களும் பிடித்தமான, அதிகபட்சமாக விரும்பி உண்ணக்கூடிய பிரபலமான தின்பண்டங்களில் ஒன்று ‘பாப்கார்ன்.’ பாப்கார்ன் இயல்பாகவே திரைப்படம் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதற்கு ஏதுவான தன்மையுடையதாய் இருக்கும். அதனால் தான் இது பலராலும் தேர்வு செய்யப்படுகிறது. பாப்கார்ன் ருசியை அனுபவிப்பதற்காகவே திரையரங்கிற்கு செல்பவர்களும் உண்டு.
ஆனால், அவ்வபோது அதன் விலை ஏறிக்கொண்டே வருவதால் அது சாமானியர்களின் கைக்கு எட்டாமல் போய்விடுகிறது. பொது இடங்களில் 50 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்படும் பாப்கார்ன்கள் திரையரங்குகளில் மட்டும் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்பது திரையரங்கிற்கு செல்லும் ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது. அதனால் இது விவாதிக்க கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
பிவிஆர் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அஜய் பிஜ்லி, பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாப்கார்ன் விலை குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், “திரையரங்குகளில் தின்பண்டங்கள் விலை உயர்வுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் பேசுவதை குறை சொல்ல முடியாது.” என ஒப்புக்கொண்டார். மேலும் அவர், இந்தியா தற்போது சிங்கிள் ஸ்கிரீன்களில் இருந்து மல்டிபிளக்ஸ்களுக்கு மாறக்கூடிய தொடக்க கட்டத்திலேயே இருப்பதால் உணவு மற்றும் பானங்களின் (Food & Beverages) விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
ஆனால் மல்டிபிளெக்ஸை பொறுத்தவரை அதன் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக தின்பண்டங்கள் அதிக விலைக்கே விற்கப்படும் என்று கூறியுள்ளார். காரணம், மல்டிபிளக்ஸ்களில் அதிக திரைகள் இருப்பதால், பல ப்ரொஜெக்ஷன் அறைகள் மற்றும் ஒலி அமைப்புகள் தேவைப்படும். மேலும் அரங்கிற்கு ஏர் கண்டிஷனிங் தேவையும் அதிகமாகியுள்ளது என்றும், திரையரங்குகளின் செலவீனங்களை ஈடு செய்வதற்கே பாப்கார்ன் போன்ற தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறினார்.
உணவு மற்றும் பானங்களின் (Food & Beverages) வணிகத்தின் மதிப்பு தற்போது நாட்டில் 1,500 கோடி மதிப்புடையதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment