நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இனி 2 நாட்களுக்கு பிறகும் Delete For Everyone... வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்.....

 WhatsApp Update | வாட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மற்றும் தேவையில்லாத செய்திகளை நீக்குவதற்காக இனி 2 நாள்களுக்கு பிறகும் Delete For Everyone ஆப்ஷனை யூசர்கள் பயன்படுத்தலாம்.


உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் தகவல் பரிமாற்ற செயலிதான் வாட்ஸ்அப். தற்போது வாட்ஸ்அப் இல்லாமல் மக்கள் இல்லாத சூழல் இல்லை. அந்தளவிற்கு மக்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள நிலையில், தனி நபர் அல்லது குழுக்களாக இணைந்து நம்முடைய நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் அலுவலக ரீதியான உரையாடல்கள் இதன் மூலம் நடைபெற்றுவருகிறது. மேலும் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில், பலரால் பொருட்களை விற்க அல்லது சேவைகளை ஊக்குவிப்பதற்காக பல மக்களை குழுக்களாகச் சேர்ப்பதற்கு இந்த வாட்ஸ்அப் குழுக்கள் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி மக்களின் நண்பராக உள்ள வாட்ஸ்அப், அவ்வப்போது யூசர்களுக்காக பல புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப்பில் அனுப்பிய தவறான மெசேஜ்களை யாரும் பார்ப்பதற்கு முன்னால், ரகசியமாக டெலிட் செய்வதற்காக 'Delete For Everyone' என்ற ஆப்சனை கடந்த 2017 ல் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாட்ஸ்அப்பில் செய்தியை நீக்கியதும், அரட்டையை சாட் பாக்சில் இருக்கும் மெசேஜ்களை அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகிய இருவரின் சாட்டில் இருந்து நீக்கம் செய்கிறது.

இனி வாட்ஸ்அப் யூசர்கள் முன்பை விட அதிக நாட்கள் பழமையான மெசேஜ்களை முற்றிலுமாக டெலீட் செய்யும் வாய்ப்பை உருவாக்குகிறது. ஆரம்பத்தில் Delete For Everyone அம்சத்தின் நேர வரம்பு ஏழு நிமிடங்களாக இருந்த நிலையில், இதன் கால வரையறை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. முன்னதாக வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் மட்டுமே பழைய செய்திகளை நீக்க அனுமதித்தது. இப்போது, இரண்டு நாட்கள் வரை பழைய செய்திகள் "அனைவருக்கும் நீக்கு"( Delete for Everyone) விருப்பத்தைக் காட்டுகின்றன.


அதாவது குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அனைவருக்கும் செய்தியை நீக்குவதற்கான கால வரம்பை 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரம் வரை அதிகரித்துள்ளது. இந்த வசதியை Android மற்றும் iOS இரண்டிலும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்களது வாட்ஸ்அப்பில் இந்த அப்டேட் வந்துள்ளதா? என்பதை உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள எந்த அரட்டையிலும் சென்று, இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தியை நீக்கிவிட்டு, இந்த அம்சம் உங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைப் பார்க்கவும். இல்லை என்றால் இன்னும் சில நாட்களில் உங்களது மொபைலில் இந்த ஆப்சன் கிடைக்கப்பெறும்.

வாட்ஸ்அப்பை தொடர்ந்து டிராக்கிங் செய்யும் WABetaInfo டிராக்கர், வாட்ஸ்அப் அண்ட்ராய்டு பீட்டா v2.21.23.1 வெர்ஷனில் இந்த அம்சங்கள் காணப்படுவதாக விவரங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!