ஆஷா மண்டேலா என்ற அந்த பெண்ணுக்கு வயது 60. கடந்த 2009 நவம்பரில் 5.96மீ ஆக இருந்த இவரது தலைமுடியின் நீளம், இப்போது 33.5 மீட்டரை தொட்டுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பராமரித்து தன் கூந்தலை வளர்த்து வருகிறார்.
ஃப்ளோரிடாவை சேர்ந்த 60 வயது பெண் உலகின் மிக நீண்ட தலைமுடி கொண்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இவரது கூந்தலின் நீளம் 33.5மீ, அதாவது 110 அடி!
நமக்கெல்லாம் நம் தலைமுடி வளர்ப்பதை விட இருக்கும் கூந்தலை சரிவர பராமரிப்பதிலேயே பாதி ஆயுள் முடிந்துவிடும் போல இருக்கும் ஆனால் இங்கு ஃப்ளோரிடாவை சேர்ந்த பெண் ஒருவர், உலகின் மிக நீண்ட தலைமுடி கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை என்பது இதற்கு தான் என்ற வரையறை எதுவும் இல்லை. மிக வேகமாகத் தக்காளி சாஸ் குடிப்பது, வாயினால் ஊதி நிலக்கடலையை மலையின் உச்சிக்கு கொண்டு செல்வது என வித்தியாசமான சாதனைகளை நாம் கேள்விப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். அவற்றில் மிக நீண்ட நகம், முடி வளர்த்திருப்பவர்களும் அடங்குவர்.
அந்த வகையில் ஃப்ளோரிடாவை சேர்ந்த ஒரு பெண் 33.5 மீட்டாருக்கு தன் தலியமுடியை வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.
ஆஷா மண்டேலா என்ற அந்த பெண்ணுக்கு வயது 60. கடந்த 2009 நவம்பரில் 5.96மீ ஆக இருந்த இவரது தலைமுடியின் நீளம், இப்போது 33.5 மீட்டரை தொட்டுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பராமரித்து தன் கூந்தலை வளர்த்து வருகிறார்.
டிரெட்லாக்ஸ் இல்லை, இது என் கிரீடம்!
இதனை டிரெட்லாக்ஸ் என பலரும் கூறிவரும் நிலையில், ஆஷா அந்த பெயரை தான் விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார். "நான் dreadlocks என்ற வார்த்தையை விரும்பவில்லை, ஏனென்றால் என் தலைமுடி பற்றி பயம் கொள்ள (dread) எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறிய ஆஷா, இதை தனது கிரீடமாக பாவிப்பதாக பெருமிதம் கொண்டார்.
சிறுவயது முதலே கனவுகளில் ராஜ நாகம் வருவதும், அது தன்னுடன் பேசுவது போன்ற அனுபவங்களை கொண்டதால், தன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு ஆன்மீக தேடலின் ஒரு வழியாக தான் தலைமுடியை வளர்க்க தொடங்கியதாக அவர் தெரிவித்தார். "கனவுகளில் தோன்றும் ராஜநாகம் என்னிடம் பேசியது, மேலும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்றும் கூறியது" என்கிறார் ஆஷா.
எப்படி பராமரிக்கிறீர்கள்?
சரி இவ்வளவு நீண்ட தலைமுடியை எப்படி பராமரிக்கிறீர்கள் என்று கேட்டபோது ஆஷா கூறியதாவது,
"நான் வெளியில் எங்காவது செல்லும்போது தன் தலைமுடியை என் ஸ்லிங் பேகிற்குள் அடக்கிக்கொள்வேன். அப்போது தான் அது தரையில் படாமல் இருக்கும்"
மேலும் தன் தலைமுடியை தன் கணவர் தான் வாஷ் செய்துவிடுகிறார். ஒரு முறை தலைக்கு குளிப்பதென்றால், ஆறு பாட்டில் ஷாம்பூ தேவைப்படுமாம். பின்னர் ஈரமான முடியை உலர்த்த இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது என்கிறார் ஆஷா.
சரியான பராமரிப்பு இல்லாவிட்டாலோ, அல்லது போஷாக்கான பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தவிட்டாலோ காலப்போக்கில் என் தலை முடி சத்தை இழந்து இறந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment