நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலை எழுந்தவுடன் 3 டம்ளர் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அதியம் என்னென்ன?

 உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்ற காலையில் தண்ணீர் குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.


உடலில் அதன் குறைபாடு அனைத்து வகையான நோய்களையும் ஏற்படுத்தும். எனவே, உடலில் நீர் சத்து இருப்பது மிகவும் முக்கியம்.

நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். தண்ணீர் பற்றாக்குறையால் தலைவலி, மலச்சிக்கல், தோல் வறட்சி, மூட்டு வலி, அஜீரணம், குறைந்த ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னை, மார்பகப் புற்றுநோய் போன்ற பல பிரச்னைகள் வரலாம். 


நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது முதல், உடல் எடையை குறைப்பது முதல் எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை கொடுக்கிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம், அதாவது மெட்டபாலிஸம் அதிகரிக்கும்.

இதன் காரணமாக உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாக இருக்கும். மேலும் நீங்கள் மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

எடையை குறைக்க

தண்ணீர் குடிப்பதால் பசி குறைகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும்.

இதனால், செரிமான அமைப்பை மேம்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது.

மன அழுத்தம் குறைய

நீங்கள் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், மூளை திசுக்களில் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது.

மேலும், நீரிழப்பு காரணமாக, உடலுடன் சேர்ந்து, மூளையும் மன அழுத்தத்தை உணர்கிறது. எனவே, அவ்வப்போது தண்ணீர் குடிப்பதன் மூலம், டென்ஷனைக் குறைக்கலாம்.

கூந்தலின் அழகை அதிகரிக்க

சரியான தண்ணீர் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் தண்ணீர் பற்றாக்குறையால், முடி மெல்லியதாகவும், உடையக்கூடியதாகவும் மாறத் தொடங்குகிறது.

தண்ணீர் பற்றாக்குறை கூட முடியின் வறட்சி மற்றும் உயிரற்ற தன்மைக்கு காரணம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது முடியின் வறட்சியைப் போக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. 

எவ்வளவு நீர் பருக வேண்டும்?

காலையில் எழுந்தவுடன் உடனடியாக குறைந்தது 3 டம்ளர் குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன்பின் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.

தண்ணீர் குடித்த 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதற்கு முன் எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.  


ALSO READ : சாம்பார் உடலுக்கு இவ்வளவு ஆரோக்கியம் கொடுக்குமா? அடுக்கடுக்கான நன்மைகள்...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!