நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரபலாகி வரும் மணக்கும் மல்லிகை அரிசி : Jasmine Rice சாப்பிடலாமா?

 பெண்கள் தங்களது கர்ப்பக்காலத்தில் முதல் மும்மாத காலத்தில் அடிக்கடி சாப்பிட ஃபோலிக் சத்து கிடைக்கும். குழந்தைக்குத் திட்டமிடும் பெண்களும் இந்த அரிசியை சாப்பிடலாம்.

நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அரிசிதான் பிரதான உணவு. அரிசி சார்ந்த உணவு வகைகளை அதிகமாக உண்ணும் பழக்கத்தில் மக்கள் உள்ளனர். எத்தனையோ வகை அரிசி வகைகள் உள்ளன. அதில் மணக்கும் அரிசியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தற்போது எல்லா நாட்டு உணவு வகைகளையும் சுவைக்கும் மல்டி குசின் ரெஸ்டாரண்ட்டுகள் அதிகரித்து வருகின்றன. எல்லா நாட்டு பாரம்பரிய உணவு வகைகளும் கிடைக்கின்றன. அந்த வகையில் தற்போது பிரபலமாகி வருகிறது ஜாஸ்மின் ரைஸ், அதாவது மல்லிகை அரிசி.

அதென்ன மல்லிகை அரிசி ?

மிக வெண்மையாகவும், அதிக நறுமணம் உடையதாகவும் இருக்கும் ஓர் அரிசி வகை. சமைத்த பின்னர் மிக வாசனையாக, மிருதுவாக, லேசான இனிப்புச்சுவையுடனும் அதிக ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். சாதாரண 'ஒரைஸா சடைவா' (Oryza sativa) நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியைவிட நீளம் அதிகமானது.

தாய்லாந்தின் ஜாஸ்மின் அரிசி, பாஸ்மதி அரிசி போல நீளமானதாக இருக்கும். ஆனால் அதிகம் ஒட்டும் தன்மையுடையது. ஸ்டிக்கி ரைஸ் என்கிறார்கள்.

இந்த ஜாஸ்மின் அரிசி தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது.

மணக்கும் அரிசி உணவு

இந்த அரிசியின் நறுமணத்துக்குக் காரணம், சமைக்கும்போது 2-acetyl-1-pyrroline எனும் வேதிப்பொருள் ஆவியாவதே. இந்த அரிசியின் நறுமணம் சேமித்து வைக்கும் சில மாதங்களில் இல்லாமல் போய்விடும். இதனால் ஒவ்வொரு முறையும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியையே நுகர்வோர் வாங்க விரும்புகிறார்கள்.

பல வண்ண தாய்லாந்து ஜாஸ்மின் ரைஸ்
பல நிறங்களில் வருகின்றன. வெள்ளைதான் பிரபலமானது. மேலும், கருப்பு, ஊதா, சிவப்பு நிறங்களிலே பல வகைகூட வருகின்றன. பழுப்பு நிற அரிசியும் வருகிறது.

பிரவுன் ஜாஸ்மின் அரிசியாகதான் இது விளைகிறது. பிறகு இது உமி நீக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதால் பளிச் வெள்ளையாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. வெள்ளை ஜாஸ்மின் அரிசியைவிட பிரவுன் ஜாஸ்மின் அரிசியில்தான் சத்துகள் அதிகம்.

பிரவுன் ஜாஸ்மின் அரிசி ஓட்ஸ் போல நறுமணம் வரும். இதில் உள்ள gamma oryzanol எனும் வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் விட்டமின் ஏ, பி, பீட்டா கரோட்டீன், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை உள்ளன. நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.



மணக்கும் அரிசியின் சத்துகள்

கால் கப் ஜாஸ்மின் அரிசியில்,

கலோரிகள் - 160

மாவுச்சத்து - 35 கிராம்

நார்ச்சத்து - 2 கிராம்

கொழுப்பு - 1 கிராம்

சோடியம் - 0 கிராம்

சர்க்கரை - 0 கிராம்

புரோட்டீன் - 3 கிராம்

மேலும் விட்டமின் பி1, பி6, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீஸ் ஆகியவை உள்ளன.

சிவப்பு, ஊதா, கருப்பு, நீலம் ஆகிய நிறங்களில் வருகின்ற ஜாஸ்மின் அரிசியில் பைட்டோநியுட்டிரியன்ட்ஸ் அதிகமாக உள்ளதால் இதைச் சாப்பிட நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கும். உடலில் உள்ள செல்கள் பாதுகாக்கப்படுகிறது.


கர்ப்பக்காலத்தில் சாப்பிட நல்லது

ஜாஸ்மின் அரிசியில் ஃபோலிக் ஆசிட் சத்து இருப்பதால், கர்ப்பக்கால பெண்கள் தங்களது கர்ப்பக்காலத்தில் முதம் டிரைமஸ்டெர் எனும் முதல் மும்மாத காலத்தில் அடிக்கடி சாப்பிட ஃபோலிக் சத்து கிடைக்கும். குழந்தைக்குத் திட்டமிடும் பெண்களும் இந்த அரிசியை சாப்பிடலாம்.

பிரவுன் ஜாஸ்மின் அரிசியில் நார்ச்சத்து உள்ளதால் செரிமான சக்தி மேம்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.




Comments

Popular posts from this blog