நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராணி எலிசபெத் மறைவு பற்றி முன்பே கணிப்பு.. உலகமே தேடும் 19 வயது இளம் பெண் யார் தெரியுமா?

 ராணி எலிசபெத் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இளம் பெண் ஒருவர் ராணி எலிசபெத் மரணம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே கணித்த விஷயம், ஒட்டுமொத்த உலகத்தினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் Foxborough என்னும் பகுதியில் வசிப்பவர் Hannah Carroll.

19 வயதே ஆகும் இவர், 2022 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பது பற்றி, சில கணிப்புகளை கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அப்படி அவர் கணிதத்தில், இதுவரை மொத்தம் 11 விஷயங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

உலகமே தேடும் 19 வயது இளம் பெண் 

ஆனால், Hannah கணிப்பது எல்லாம் கிம் கார்தஷியன் உள்ளிட்ட பல தொலைக்காட்சி மற்றும் ஊடக பிரபலங்கள் தொடர்பான செய்திகளை தான்.

உதாரணத்திற்கு கிம் கார்தஷியன் மற்றும் டேவிட்சன் இந்த ஆண்டு பிரேக் அப் செய்வார்கள் என Hannah கணித்திருந்தார். அதன் படி, சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து கொண்டதாக தகவல்களும் வெளியாகி இருந்தது. 

குறித்த இளம் பெண் இந்த ஆண்டில் Hannah கணித்த நிறைய விஷயங்கள், அப்படியே நடைபெறவும் செய்துள்ளது.

அவர் ஏற்கனவே கணித்த விஷயங்கள் நடந்து வருவதால், அவரை ஏராளமானோர் பின் தொடரவும் செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல், தற்போது இதனை ஒரு தொழில் ஆகவே, Hannah தொடங்கியுள்ள நிலையில், மாதத்திற்கு சுமார் £1,500 (இந்திய மதிப்பில் சுமார் 1.4 லட்சம் ரூபாய்) வரை அவர் சம்பாதித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஹன்னா கணித்த விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று தான் ராணி எலிசபெத்தின் மறைவு. 

கடந்த ஜனவரி மாதம், ஹன்னா கணித்திருந்த போது ராணி எலிசபெத் இந்த ஆண்டு மறைந்து விடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் படி, தற்போது நிஜத்திலேயே நடந்துள்ள விஷயம், பலரது கவனத்தையும் ஈர்த்து இளம்பெண்ணான ஹன்னாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்