தினமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 45 நிமிடங்கள் போதுமா?
- Get link
- X
- Other Apps
ஆண், பெண் என அனைவருமே உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறார்கள், இதற்காக உடற்பயிற்சி செய்பவர்கள் ஏராளம்.
அவர்களுக்கான பதிவு இதோ,
ஆரோக்கியமாக வாழ்க்கைக்கு 45 நிமிடங்கள்
தினசரி 30 அல்லது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் மற்றும் உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகின்றது. இதனால் உடலிலுள்ள கொழுப்பு வேகமாகக் கரைந்து உடலுக்குத் தேவையான சக்தியளிக்கிறது.
தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும்.
மேலும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் தசைகளின் வலிமை கூடும், உடல் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் திசுக்களுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கும்.
உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்
ஆப்பிள்
ஆரஞ்சு
பேரிக்காய்
பப்பாளி
பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி
ஓட்ஸ்
தயிர்
கிரீன் டீ
நட்ஸ்
உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டிய உணவுகள்
தண்ணீர்
இளநீர்
வாழைப்பழம்
அவித்த முட்டை
தயிர், மோர், பால் போன்ற கொழுப்பு உணவுகள்
அதிக நேர உடற்பயிற்சியினால் ஏற்படும் பாதிப்புகள்
உடல் சோர்வு
தீவிரமான உடல்பயிற்சியானது “மன அழுத்த ஹார்மோனை” வெளியிட்டு உடலை கட்டாயப்படுத்தும். இது காலப்போக்கில் உடலை சோர்வடையச் செய்யும். எனவே தீவிரமான உடற்பயிற்சியை தவிர்த்து மிதமான பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது.
உடல் செயல்திறன் குறையும்
உடற்பயிற்சியை கடினமாக செய்யும் போது உடலிவுள்ள தசைகள் பதட்டமாகின்றன. இது படிப்படியாக களத்திலுள்ள செயல்திறன் அளவைக் குறைக்கிறது. எனவே பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் ஓய்வாக இருக்க வேண்டும்.
உடலில் காயங்கள் அதிகரிக்கும்
உடற்பயிற்சி பழக்கம் இல்லாது திடீரென அதை மேற்கொள்ளும் போது காயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது தசை வலி, மூட்டு திரிபு, முதுகுவலி ஆகியவைகளாகும். எனவே உடற்பயிற்சியில் படிமுறைகளை கையாளுதல் சிறந்தது.
தூக்கமின்மை
தசைகளில் அழுத்தம் அதிகமாக இருப்பதனால் போதியளவு தூக்கமின்மை ஏற்படும். எனவே எதையும் மிதமாக செய்வதே நல்லது.
உடற்பயிற்சியினால் உடலை அழகுபடுத்துபவர்களுக்கான சில டிப்ஸ்
சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிட வேண்டும்.
முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும் வேண்டும்.
அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.
தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாக உற்கொள்ள வேண்டும்.
குறிப்பு - இன்றைய நவீன உலகில் உடற்பயிற்சிக்கென எத்தையோ தொழிநுட்ப சாதனங்கள் உள்ளன. அதன் பயன்பாட்டிலும் விட எமது உணவு பயன்பாட்டிலும், யோகா போன்ற பயிற்சினாலும் எமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் நிரந்தரமானது.
ALSO READ : உங்க இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை ஈஸியாக குறைக்கனுமா? இந்த உணவுகள் மறக்கமால் சாப்பிடுங்க போதும்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment