நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிக்கன் குழம்பே தோற்றுப்போகும் அளவிற்கு மீல் மேக்கர் கிரேவி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி...

 அசைவம் விரும்பாதவர்களுக்கு சிக்கன் குழம்பு சுவையை சுவைக்க விரும்பினால் இந்த மீல் மேக்கர் கிரேவியை செய்து சாப்பிடலாம்.


எப்போதாவது வீட்டில் அசைவ உணவு செய்யக்கூடாது, செய்ய முடியாது என்கிற சூழல் வந்தால் இந்த மீல் மேக்கர் கிரேவி உங்களுக்கு உதவலாம். அதேபோல் அசைவம் விரும்பாதவர்களுக்கு சிக்கன் குழம்பு சுவையை சுவைக்க விரும்பினால் இந்த மீல் மேக்கர் கிரேவியை செய்து சாப்பிடலாம். சப்பாத்தி, நாண் ரொட்டி வகைகளுக்கு பக்காவான பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மீல் மேக்கர் - 100 கிராம்

தயிர் - 3 tbsp

வெங்காயம் -1

தக்காளி - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 3

எண்ணெய் - 4 tbsp

மிளகாய்த்தூள் - 1 tsp

மஞ்சள் - 1/2 tsp

சீரகத்தூள் - 1 tsp

கரம் மசாலா - 1 tsp

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தே.அ


செய்முறை:

முதலில் மீல் மேக்கரை தண்ணீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரைப் பிழிந்து மீல் மேக்கரை தனியாக எடுத்து அத்துடன், தயிர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி தனியாக எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.

அதில், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் போட்டு கலக்கவும். அத்துடன், வெங்காயம் விழுது சேர்த்து வேக வைக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனைப் போன பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், மீல் மேக்கர், உப்பு, தண்ணீர் சேர்த்து கிளறி சுமார் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

இடையே, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி மீண்டும் 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி...



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்