நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டிரெண்டாகும் கிளாசி மேக்அப்... நீங்களும் டிரை பண்ண உங்களுக்கான டிப்ஸ்...

 Make Up | SUGAR Cosmetics நிறுவனத்தின் அசோசியேட் துணைத் தலைவரான மம்தா நாயக், கிளாசி-மேக்கப் டிரெண்டை மேம்படுத்தி கொள்ள உதவும் ஹேக்ஸ்களை பற்றி ஷேர் செய்துள்ளவற்றை இங்கே பார்க்கலாம்...


அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது உள்ளிட்ட பல டிப்ஸ்கள் சருமம் பளபளக்க இயற்கையான முறையில் உதவுகின்றன.என்றாலும் கூடுதல் பளபளப்பை அளிப்பதில்பிரத்தியேகமாக நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீங்கள் சமீபத்திய மேக்கப் ட்ரெண்டுகளைத் தொடர்ந்து பின்பற்றி பளபளப்பான மேக்-அப் டிரெண்டை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், உங்கள் அன்றாட வழக்கத்தை விட அதில் இருக்கும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.


இலுமினேட்டிங் மாய்ஸ் : சரைசருடன் நாளை துவக்குங்கள்..
குறைபாடற்ற மேக்கப் என்பது உண்மையிலேயே நன்கு ஹைட்ரேட்டான பேஸ் (well-hydrated base) என்பதில் இருந்து தான் துவங்குகிறது. தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்காமலேயே சருமத்தை ஜொலிக்க வைக்க இது சிறந்த ஹேக் ஆகும். ஏனென்றால் இலுமினேட்டிங் க்ரீம்ஸ் அல்லது இலுமினேட்டர்கள் மாய்ஸ்சரைசரைப் போன்ற நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதோடு,சருமத்திற்கு இயற்கை பளபளப்பைக் கொடுக்கும்.


ஃபவுன்டேஷன் : Dewy foundation தயாரிப்புகளில் சருமம் ஹைட்ரேட்டாக மற்றும் பளபளப்பாக தோற்றமளிக்க உதவும் பொருட்கள் உள்ளன. இளமையாக தோற்றமளிக்கும் சருமத்திற்கு உதவும் ஃபார்முலாக்கள் இவற்றில் காணப்படுகின்றன. இது உங்கள் சருமத்தின் நிறத்தை சமன் செய்வது மட்டுமல்லாமல், இயற்கையான தோற்றத்தையும் கொடுக்கும்.


பளபளப்பான ஐ ஷேடோ : கலர் ஐலைனர்கள் மற்றும் மெட்டாலிக் ஐ மேக்கப் தவிர க்ளாசி ஐ ஷேடோக்களும் (glossy eyeshadow) சமீபத்தில் பிரபலமாகி வருகின்றன. மாடல்கள் மற்றும் பிரபலங்கள் பளபளப்பான ஐ ஷேடோக்களை பயன்படுத்தி லுக்காக தெரிய விரும்புகிறார்கள். கண் இமைகளில் சிறிதளவு வாஸ்லைன் அல்லது உங்களுக்குப் பிடித்த ட்ரான்ஸ்பரன்ட் லிப்கிளாஸ் மற்றும் voila-வை தேய்க்கலாம்.


செட்டிங் ஸ்ப்ரே.. மேக்கப் செட்டிங் ஸ்ப்ரேயானது ஃபினிஷிங் ஸ்ப்ரே என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒளிரும் மேக்கப்பை கலையாமல் நாள் முழுவதும் பளபளப்பாக அப்படியே வைத்திருக்க செட்டிங் ஸ்ப்ரே உதவுகிறது. இது உங்கள் மேக்கபின் ஆயுட்காலத்தை அதிகரிக்க மற்றும் ஃபேடிங்காவதை தடுக்க பயன்படுகிறது.


உதடுகளில் பளபளப்பு.. முகத்திற்கு பளபளப்பை கூட்டுவதை போலவே உதட்டிற்கும் பளபளப்பை சேர்ப்பது குறிப்பிட்ட மேக்கப்பை முழுமையானதாக்கும். எனவே உதடுகளுக்கு அற்புத நிறத்தை வழங்கும் வகையிலான மேலும் உங்கள் மேக்கப்பிற்கு ஏற்ற கலர்ஃபுல் லிப் கிளாசை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.


இதனிடையே Simply Nam-ன் நிறுவனர் நம்ரதா சோனி கூறுகையில், ஒரு கிளாசி மேக்கப் லுக்கை உருவாக்குவதில் முக்கியபடி, உங்கள் தோல் வகைக்கு ஏற்ற தயாரிப்புகளை சரியாக தேர்வு செய்து பயன்படுத்துவது என்கிறார். வறண்ட சருமம் உள்ளோர் ஹெவி மாய்ஸ்சரைர், சென்சிட்டிவ் சருமமா இருந்தால் ஜெல் அல்லது சீரம் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரை பயணப்படுத்த கூறுகிறார். பின் dewy ஃபினிஷ் கொண்ட பிரைமர் பயன்படுத்துங்கள். பின் உங்கள் ஃபவுன்டேஷனில் சிறிது திரவம் அல்லது பவுடர் ஹைலைட்டரைக் கலந்து, ஸ்பான்ஜ், பிரஷ் அல்லது விரல் நுனிகள் மூலம் உங்கள் தோலில் பஃப் செய்யவும். தொடர்ந்து கண்களுக்குக் கீழே, வாயைச் சுற்றி, மூக்கு பகுதிகள், நெற் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் பவுடரை தடவலாம் என்று டிப்ஸ் கொடுத்துள்ளார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்