நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய Balance Mouse - இணையத்தில் வைரலாக காரணம் என்ன?

 Wired, Wireless, Bluetooth என வித விதமாக மவுஸ்கள் சந்தையில் வந்துவிட்டன. இவற்றுடன், தற்போது சாம்சங் நிறுவனம் புதியதோர் மவுஸை அறிமுகப்படுத்தியுள்ளது.


பணி நேரம் முடிந்ததும் வேலை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படியாக ஒரு மவுஸை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். 

கணினிமயம் ஆகிவிட்ட உலகத்தில், முக்கியத் தேவைகளில் ஒன்று mouse. கணினிகள் பயன்படுத்தும்போது, தனியாக மவுஸ் பயன்படுத்தவேண்டும். ஆனால், மடிக்கணினிகளுக்கு அப்படியில்லை. 


சமயத்தில் மடிக்கணினிகளுக்கும் தனியாக நாம் மவுஸ் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். இதனால் கம்ப்யூட்டரில் வேலை செய்ய  நமக்கு இன்னும் எளிதாக இருக்கும். Wired, Wireless, Bluetooth என வித விதமாக மவுஸ்கள் சந்தையில் வந்துவிட்டன. இவற்றுடன், தற்போது சாம்சங் நிறுவனம் புதியதோர் மவுஸை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அந்த மவுஸ் நம் பணி நேரம் முடிந்ததும், வேலை செய்வதை நிறுத்திவிடும். இதனை நிறுவனம், ஊழியர்களின் வொர்க்-லைஃப் பேலன்ஸை பாதுகாக்க அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ளது. இதன் பெயர் பேலன்ஸ் மவுஸ்.

சாம்சங் நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில் ஒருவர் நெடுநேரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் தன் வேலைக்காக பேலன்ஸ் மவுஸை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அப்போது அந்த மவுஸ் அவர் கையை விட்டு நழுவி ஓடி செல்கிறது. காரணம், அவர் தன் பணி நேரம் முடிந்து வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார். இது அந்த மவுஸ்க்கு பிடிக்கவில்லை. அவரிடம் இருந்து ஓடி சென்ற அந்த எலி, தனித்தனி பாகங்களாகவும் பிரிந்து விடுகிறது. 

இப்படி தான் அந்த பேலன்ஸ் மவுஸின் கான்சப்ட்டை அறிமுகப்படுத்தியது சாம்சங் நிறுவனம். இந்த மவுஸின் வடிவமும் பார்ப்பதற்கு எலியை போல தான் இருக்கிறது. 

இதனை இணையத்தில் பார்த்த பலரும், தங்கள் மேலதிகாரிகள் கண்களில் படும்வரை இந்த செய்தியை பகிருங்கள் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!