1 கப் பிளாக் டீயில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
- Get link
- X
- Other Apps
மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக ப்ளாக் டீ இருக்கிறது.இது மற்ற தேயிலைகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது.
பிளாக் டீயானது எளிதான தேநீர் மட்டுமல்லாது இது நமக்கு ஏகப்பட்ட நன்மைகளை தருகிறது.
ப்ளவனாய்டுகள், டானின்கள் மற்றும் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. இந்த பிளாக் டீயை உங்க எடை இழப்பிற்கு கூட பயன்படுத்தி வரலாம்.
அந்தவகையில் பிளாக் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
பிளாக் டீ குடிப்பது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது, இதனை தினசரி குடிப்பதன் மூலம் செரிமான மண்டலம் நன்கு செயல்பட துவங்குகிறது.
பிளாக் டீயில் உள்ள மூலக்கூறுகள் நமது சிறு குடலில் நீண்ட நேரம் தங்கியிருந்து நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்கிறது.
1 கப் பிளாக் டீயில் 47 மிலி கேஃபைன் உள்ளது, இந்த கேஃபைன் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இதன் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
தினமும் பிளாக் டீ அருந்துபவர்களில் டைப்-2 நீரிழிவு நோயுக்கான அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
பிளாக் டீயிலுள்ள நன்மைபயக்கும் மூலக்கூறுகள் தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.
பிளாக் டீ அருந்துவதால் கொழுப்புகளின் அளவு கட்டுக்குள் இருந்து ரத்த ஓட்டம் சீராகி இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது.
பிளாக் டீ குடிப்பதால் மன அழுத்தம் நீங்கி ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
பிளாக் டீ குடிப்பதால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறது, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது, எலும்புகள் வலுவாக்கப்படுகிறது மற்றும் வாயில் எவ்வித தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்குகின்றது.
ALSO READ : வீட்டிலேயே ரோட்டுக்கடை காளான் செய்ய தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க... ரெசிபி இதோ...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment