நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் ஒரு கைப்பிடி உப்புக்கடலை சாப்பிடுங்க! இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்....

 கருப்பு கொண்டைக்கடலையை எண்ணெய் சேர்க்காமல், உப்பு மட்டும் கலந்து வறுத்து எடுப்பதை தான் நாம் உப்புக்கடலை என்று சொல்லுவோம்.

இந்த உப்புக்கடலை மிகச்சிறந்த, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். இந்த வறுத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

அந்தவகையில் என்னென்ன மாதிரியான நன்மைகளை நாம் பெற முடியும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் வறுத்த கொண்டைக்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரங்களில் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் அடுத்த வேளை உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவைக் குறைக்க முடியும்.  

  •  கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே. அதனால் வறுத்த கொண்டைக்கடலை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஸநாக்ஸாக இருக்கும். 

  •  வறுத்த கொண்டைக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்க உதவும். 

  •  வறுத்த கொண்டைக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்களீசு ஆகியவை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. மூட்டு வலி முதல் எலும்பு சம்பந்தமான தொற்றுக்கள், எலும்பு புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வறுத்த கொண்டைக்கடலை உதவும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!