மண்பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை தருமா?
- Get link
- X
- Other Apps
பொதுவாக மண்பானையில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் அதிகம்.
இதனால் தான் வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது.
தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாக விளங்கும் மண்பானை சமையல் முறையில் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.
மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.
மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும். இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும்.
குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும்.
மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.
ALSO READ : தேவையற்ற கவலைகள் உடல் நலனையும் பாதிக்கும் : மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment