பிரட் ஓரம் இருக்கும் பகுதியை ஏன் சாப்பிடமாட்றீங்க...? உங்களுக்காக உருவாக்கப்பட்ட புது பிரட்!!
- Get link
- X
- Other Apps
புதிய ரொட்டி குறைந்த வெப்பநிலையில் மெதுவாக சுடப்படுகிறது, இது மேலோடு பழுப்பு நிறமாக மாறாமல் ஈரப்பதமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
உணவை வீணாக்குவது என்பது உலகம் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சனை. உலக அரங்கில் பசி பஞ்சம் என்று ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் உணவை சாதாரணமாக வீணடிக்கின்றனர். விரயத்தைக் குறைப்பதற்கான புதுமையான வழிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றி வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக ஜப்பானில் ஒரு உணவு நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். பொதுவாக நாம் சாப்பிடும் பிரட் வகைகள் பேக் செய்யப்படும்போது முறுகி வெளிப்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளே இருக்கும் மிருதுவான பகுதி இனிப்பாகவும் சுற்றி உள்ளது கொஞ்சம் சுவை மாசுபட்டு இருக்கும்.
ஹோட்டல்களில் சுவை மாறுபாடு ஏற்படும் என்பதற்காக சுற்றி உள்ள பழுப்பு பகுதியை வெட்டி குப்பையில் போட்டுவிடுவர். அவை உண்ணக்கூடிய பாகங்களாக இருந்தாலும் அது வீணடிக்கப்படுகிறது. இப்படி போடும் பிரட் ஓரங்கள் மட்டும் பல ஆயிரம் கிலோ உணவு வீணாவதற்கு வழி செய்கின்றன.
இப்படி ஓரங்களை வெட்டி உணவை வீணடிக்காமல் இருக்க ஒரு புதிய பிரட் வகையை உருவாக்கியுள்ளனர். ஷோகுபன் என்பது ஒரு வகையான வெள்ளை பால் ரொட்டி. இது மென்மையாக இருக்கும். இது ஜப்பானிய மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. சாண்ட்விச்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஷோகுபன் ரொட்டியின் விரயத்தைக் குறைக்க, சில நிறுவனங்கள் அவற்றை கால்நடைத் தீவனமாகவும் மற்ற சுடப்பட்ட பொருட்களாகவும் பயன்படுத்த விவசாயிகளுக்கு வழங்குகின்றன.இருப்பினும், அதன் ஓரங்களை வெட்டாமல் பயன்படுத்த புதிய வகை ஷோகுபான் ரொட்டியை தற்போது உருவாக்கியுள்ளனர்.
ஜாப்பனின் இம்பீரியல் ஹோட்டல் இதற்கான புதிய வழியை உருவாக்கி, அக்டோபர் 1 முதல் சாண்ட்விச்கள் தயாரிக்கும் போது அதைச் பயன்படுத்த உள்ளனர். 1971 ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஆடம்பர பேக்கரியான Gargantua Delicatessen இல் வாடிக்கையாளர்களுக்கு இனி இந்த பிரட்டுகள் வழங்க உள்ளனர்.
டோக்கியோவைச் சேர்ந்த செஃப் சுகிமோட்டோ தான் இந்த புதிய வகையான ஷோகுபான் ரொட்டியை உருவாக்கியுள்ளார். இது சுற்றி உள்ள படுதிகளையும் சேர்த்து உட்கொள்ளக்கூடியது. மேலோடு கடித்தால் சுவையில் மாற்றம் இருக்காது. உணவு மூலம் ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதில் தீவிரமாக இருப்பவர் இவர். புதிய அமைப்புக்கு வருவதற்கு அவர் 6 மாதங்கள் சோதனை மற்றும் பிழை திருத்தங்கள் செய்ததாக கூறப்படுகிறது.
புதிய வகை வெள்ளை பால் ரொட்டி பாரம்பரிய ஷோகுபானிலிருந்து சமைக்கும் முறையில் வேறுபட்டது. ஷோகுபானுடன் ஒப்பிடும்போது புதிய ரொட்டி குறைந்த வெப்பநிலையில் மெதுவாக சுடப்படுகிறது, இது மேலோடு பழுப்பு நிறமாக மாறாமல் ஈரப்பதமாகவும் மென்மையாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறது.
ALSO READ : உலகின் சிறந்த விமான நிறுவனங்கள்.. 7-வது ஆண்டாக மாஸ் காட்டும் கத்தார் ஏர்வேஸ்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment