நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இந்த தவறை தான் தினம் செய்றீங்க...

 கையில் செல்போன் வைத்திராத மனிதர்களையே பார்ப்பது அரிது என்றாகிவிட்டது. ஆனால் உண்மையில் செல்போனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் பலர் இன்னும் உள்ளனர்.

செல்போனை பயன்படுத்துவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது.

பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டும் எடுத்து பேசுவது பெண்களுக்கு நல்லது.

ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.

எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

போன் பேசிக்கொண்டிருக்கும் போது காது அருகே சூடாகிக் கொண்டே இருந்தால் அந்த போனை தூர எறிவது நல்லது.

சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது போன் வந்தால் அப்படியே பேசக் கூடாது.

போன் வரும் போது தான் ரேடியேசன் இருக்கும். போன் ரிங்கிங் ஆவதை விட வைப்ரேசன் தான் அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். 



ALSO READ : Super Fast Expressway: உலகின் 'Super Fast' நெடுஞ்சாலைகள்; வேக வரம்பு எவ்வளவு எனத் தெரியுமா..!!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்