Dark Underarms Cleaning Tips: எளிதாய் சுத்தம் செய்ய முடியாத பல காரணங்களால் அக்குள் கருப்பாக மாறுகிறது. அத்தகைய சில குறிப்புகளை இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், இதன் மூலம் நீங்கள் அக்குள் கருமையை போக்கலாம்.
- அக்குள் கருமையை ஒளிரச் செய்வது எப்படி
- அக்குள் கருமையை போக்க சில வழிகள்
- அற்புதமான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்
அக்குள் கருமையை ஒளிரச் செய்வது எப்படி: கோடை காலத்தில் வியர்வையால் பெரும்பாலானோரின் அக்குள் கருப்பாக மாறும், இதை சுத்தம் செய்வது எனபது மிகவும் கடினமான பணியாகும். அக்குள் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அத்தகைய சில குறிப்புகளை இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், இதன் மூலம் நீங்கள் உங்களின் அக்குள் கருமையை போக்கி பளபளப்பாக மாற்றலாம்.
எலுமிச்சை கொண்டு அக்குளை சுத்தம் செய்யலாம்அக்குள்களை சுத்தம் செய்யவும், அக்குள் கருமையை குறைக்கவும் எலுமிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு எலுமிச்சையை தடிமனான துண்டுகளாக வெட்டி, அதை உங்கள் அக்குள்களில் சில நிமிடங்கள் தேய்க்கவும், பின்னர் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அக்குளை கழுவவும். பின்னர் காய வைத்தப் பின் மாய்ஸ்சரைசர் கொண்டு அக்குளில் தடவவும். இது அக்குள்களின் நிறத்தை சரி செய்ய உதவும்.
உருளைக்கிழங்கு சாறுடன் அக்குள்களை சுத்தம் செய்யலாம்
உருளைக்கிழங்கு சாறு அக்குள்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதற்கு உருளைக்கிழங்கைத் துருவி அதன் சாற்றை எடுத்து பின் அக்குளில் தடவி உலர விடவும். சில நிமிடங்களுக்குப் பிறகு அக்குள்களைக் கழுவி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் அக்குள் சுத்தமாகும்.
எலுமிச்சையுடன் மஞ்சள் கலந்து தடவவும்
அக்குள் கருமையை நீக்க, எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இதற்குப் பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் அக்குள்களில் தடவி சுமார் 30 நிமிடங்கள் உலர விடவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதனால் அக்குள் கருமை நீங்கும்.
பப்பாளி மற்றும் எலுமிச்சை சாறு
எலுமிச்சை மற்றும் பப்பாளி அக்குள் கருமையை நீக்க உதவுகிறது. முதலில் பழுத்த பப்பாளியின் தோலை நீக்கவும், பின்னர் அதில் சிறுது எலுமிச்சை சாறு கலந்து அக்குள்களில் தடவவும். 20-25 நிமிடங்கள் வைத்திருந்து, உலர்த்திய பின் அக்குள்களைக் கழுவவும்.
Comments
Post a Comment