நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கழுத்து மட்டும் கருப்பு நிறமா இருக்கா? அதனை எப்படி எளிய முறையில் போக்கலாம்?

 பொதுவாக நம்மில் பலருக்கு முகம் நல்ல வெள்ளையாக இருக்கும். கழுத்து மட்டும் கருப்பாக காணப்படும். 

சிலர் இரசாயனம் கலந்த அழகு பொருள்களை அதிகம் பயன்படுத்துவதால் கூட இந்த கருமை உருவாகலாம்.

அதோடு மாசுகள் தங்கிவிடுவது. அதுமட்டுமின்றி நீரிழிவு இருப்பது என எல்லாமே கழுத்து கருமைக்கு காரணமாக இருக்கலாம். 

கழுத்து ககருப்பை மறைக்க க்ரீம் வகைகளை நாடுவதை காட்டிலும் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு கருமையை குறைக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம். 


  • கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை திறந்து அதை கழுத்து முழுக்க தடவி முன் கழுத்து பின் கழுத்து என தடவி சில நிமிடங்கள் கழித்து கழுத்தை தடவி எடுத்தால் போதும் . பிறகு 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில கழுவி எடுக்கவும்.

  • 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்து சிறிதளவு நீர் கலந்து பஞ்சை நனைத்து பிறகு கழுத்து முழுக்க தடவி விடவும். இதை சில நிமிடங்கள் விட்டுவிட்டு பிறகு சாதாரண நீரில் கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு முறை இதை செய்து வரலாம். ஆப்பிள் சீடர் வினிகர் அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கலாம். அதனால் அதை நீர் சேர்த்து நீர்த்துபோக செய்து பிறகு பயன்படுத்துவது நல்லது.

  • பாதாம் எண்ணெயில் சில துளிகள் எடுத்து கழுத்தில் தோய்த்து சில நிமிடம் மசாஜ் செய்யலாம். வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் சருமத்தில் உறிஞ்சுக்கொள்ளும். இதனால் சருமம் மென்மையாவதோடு சருமத்தின் பொலிவும் கூடும். நிறமும் மீட்க முடியும். தினமும் இரவில் இதை செய்துவரலாம்.

  • கெட்டித்தயிர் எடுத்து முன் கழுத்து பின் கழுத்து பகுதியில் நன்றாக மசாஜ் செய்வது போன்று தேய்த்து பிறகு பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீரில் துடைத்து எடுக்கவும் தினமும் இரண்டு முறை அல்லது ஒருமுறை தவிர்க்காமல் செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். விரைவாகவே கழுத்து கருமை நீங்கும்.    

  • உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதை முன் கழுத்து பின் கழுத்து பகுதியில் தடவி விடவும். அல்லது சாறு நிறைந்த உருளைக்கிழங்கை அப்படியே இரண்டாக வெட்டி கழுத்துப்பகுதியில் மிருதுவாக தேய்க்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்..உருளைக்கிழங்கு கழுத்து கருமையை போக்க உதவும்.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!