Super Fast Expressway: உலகின் 'Super Fast' நெடுஞ்சாலைகள்; வேக வரம்பு எவ்வளவு எனத் தெரியுமா..!!
- Get link
- X
- Other Apps
உலகில் எந்தெந்த இடங்களில் மணிக்கு 130 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் கார்கள் இயக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிவேக விரைவுச் சாலைகள்: இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான சைரஸ் மிஸ்திரி, சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் உயிரிழந்தார் என்பதை அனைவரும் அறிவோம். அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டது. விபத்தின் போது சைரஸ் மிஸ்திரியின் கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை. இந்நிலையில், உலகில் எந்தெந்த இடங்களில் மணிக்கு 130 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் கார்கள் இயக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜெர்மன்
ஜெர்மனியில் உள்ள ஜெர்மன் ஆட்டோபான் சாலையில் கார்களுக்கு அதிகபட்ச வேக வரம்பு இல்லை. இங்கே நீங்கள் விரும்பிய வேகத்தில் ஓட்டலாம், இருப்பினும் நீல சைன் போர்டில், உச்ச வரம்பு 130 கிமீ வேகம் என எழுதப்பட்டு உள்ளது. ஆனால் இதுவும் சாதாரண வேகத்தை விட அதிகம்.
ஹங்கேரி
ஹங்கேரியின் தேசிய நெடுஞ்சாலையில் 130 கிமீ வேகத்தில் காரை ஓட்ட முடியும். இருப்பினும், பாதுகாப்புக்காக சீட் பெல்ட் அணிவது கட்டாயம். ஓட்டுநர் விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், வேக வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இது பெரும்பாலும் வடக்கு ஆஸ்திரேலியாவின் பகுதிகள் என்பது குறிப்படத்தக்கது. இப்போது ஆஸ்திரேலியாவிலும், அதிகபட்ச வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய நெடுஞ்சாலையில், நீங்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டலாம்.
லக்சம்பர்க்
லக்சம்வர்மில் மொத்தம் 6 விரைவுச் சாலைகள் உள்ளன, இந்த விரைவுச் சாலைகளில், 130 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் மழைக்காலத்தில், 110 வேகத்தை விட அதி வேகத்தில் ஓட்ட தடை உள்ளது.
பல்கேரியா
பல்கேரியாவில் வாகனங்கள் மணிக்கு 130-140 கிமீ வேகத்தில் செல்கின்றன. இங்குள்ள சாலைகள் பல, மிகவும் போக்குவரத்து நெரிசல் கொண்டது. எனினும், பல சாலைகளில் 120 கிமீ வேகத்தில் வாகனங்கள் ஓடுவதைக் காணலாம்.
இந்தியாவில் வாகனங்களின் வேகம்
இந்தியாவில் உள்ள எக்ஸ்பிரஸ்வே என்னும் அதிகவேக நெடுஞ்சாலைகளில் கார்களின் வேகம் மணிக்கு 100 கி.மீ.க்கு மேல் இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த வேகம் மணிக்கு 80 கி.மீ. நகர்ப்புறங்களில் கார்கள் மற்றும் பிற வாகனங்களின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : பிழை கண்டுபிடித்தால் ₹25 லட்சம் வரை பரிசு.. கூகுள் பலே திட்டம்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment