நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காரசாரமான மீன் மிளகு மசாலா ஓட்டல் ஸ்டைலில் வீட்டில் செய்வது எப்படி?

 காரசாரமான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்

  1. துண்டு மீன் – அரை கிலோ
  2. வெங்காயம் – 200 கிராம்
  3. பச்சை மிளகாய் – நான்கு
  4. இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
  5. சீரகம் – ஒரு டீஸ்பூன்
  6. மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் – ஐந்து
  8. கொத்தமல்லி இலை – ஒரு கப்
  9. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  10. உப்பு – தேவைகேற்ப
  11. எண்ணெய் – தேவைகேற்ப
  12. கறிவேபில்லை – சிறிதளவு 

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.


அடுத்து அதில் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும். மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சூப்பரான மீன் மிளகு மசாலா ரெடி.



ALSO READ : காலை வெறும் வயிற்றில் பழைய சோறு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்