தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்கும் ஆட்டுப்பால் .....
- Get link
- X
- Other Apps
ஆட்டுப்பாலை நேரடியாக சருமத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்கும். சருமத்தின் இளமையை பாதுகாக்கும்.
சருமத்தின் அழகையும், மிருதுவான தன்மையையும், பொலிவையும் பராமரிப்பதற்கு உதவும் இயற்கையான பொருள் ஆட்டுப்பால். சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும் ஆட்டுப்பாலை முகத்தில் பூசி வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
சத்துக்கள்:
ஆட்டுப்பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், ஒமேகா-6, வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
சருமத்தை மிருதுவாக்கும்:
சென்சிடிவ் மற்றும் வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் எளிதாக பொலிவை இழக்கும். இவர்களுக்கு ஆட்டுப்பால் சிறந்த தீர்வாக அமையும். இது தோல் அழற்சி, அரிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும். இதில் இருக்கும், லாக்டிக் அமிலம் சருமத்துக்குள் எளிதாக ஊடுருவி தோலை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்றும்.
வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீராக்கும். சருமத்தின் அடுக்குகள் கொழுப்பு மற்றும் செலினியம் மூலக்கூறுகளைக் கொண்டவை. இவற்றில் குறைபாடு ஏற்பட்டால், சருமம் விரைவில் வறட்சி அடையும். ஆட்டுப்பாலில் இருக்கும் கொழுப்பு மற்றும் செலினியம் சத்துக்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்கின்றன.
ஆழமாகப் பரவும்:
சருமத்துக்கு அவசியமான கொழுப்பு அமிலங்கள் ஆட்டுப் பாலில் உள்ளன. இதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும், சருமத்தில் ஆழமாக ஊடுருவி செயல்படும். ஆட்டுப் பாலில் உள்ள புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது முகப்பருவை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் சருமத்திற்கு ஊட்டம் அளித்து சருமத்தின் இளமையை பாதுகாக்கின்றன. ஆட்டுப் பாலில் இருக்கும் ஆல்பா ஹைடிராக்சில் அமில மூலக்கூறுகள், தோலில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கி அமில-கார சமநிலையை சீராக்குகிறது.
அதிகமான எண்ணெய்ச் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. ஆட்டுப்பாலை நேரடியாக சருமத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்கும். தளர்ந்த சருமம் இறுக்கமாகும். ஆட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு முன்பு, சிறிது சருமத்தில் தடவி எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
ALSO READ : தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள் .....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment