நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாயுத்தொல்லையால் ரொம்ப அவதியா? இதனை தடுக்க இந்த பானங்களை எடுத்துகோங்க...

 இன்றைய காலத்தில் பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுள் அஜீரணக் கோளாறு உள்ளது. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் துக்க சுழற்சி போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நமக்கு அஜீரணக் கோளாறு பிரச்சினைகள் உண்டாகும்.

இந்த அஜீரணக் கோளாறினால் நம்முடைய உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்படுவதோடு வயிறு உப்பசம், அசிடிட்டி, வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

இதனை எளியமுறையில் சரி செய்ய முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றது. அந்தவகையில் சரிசெய்ய என்ன மாதிரியான பானங்களை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.  


  • பால், சர்க்கரை எதுவும் சேர்க்காமல் தினமும் காலை மற்றும் மாலையில் க்ரீன் டீ குடித்து வரும்போது அது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் குறைப்பதோடு வயிற்றுப் பகுதியில் வாயு தேங்காமலும் பார்த்துக் கொள்ளும்.

  •  வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக அதில் எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் துண்டுகள், கிவி பழை துண்டுகள் ஆகியவற்றை சேர்த்துக் குடிப்பதன் மூலம் உடலை அதிகமான நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும். 

  •  10 புதினா இலைகளை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, பின் தேன் சேர்த்து டீ போல பருகி வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முடியும். குறிப்பாக அஜீரணக் கோளாறு, அசிடிட்டி, வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

  •    இளநீரில் பாஸ்பரஸ் நிறைந்திருக்கிறது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. அதனால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும்.

  • வயிறு சம்பந்தப்பட்ட எல்லா வித பிரச்சினைகளுக்கு இஞ்சி மிகச்சிறந்த தீர்வாக அமையும். அதேபோன்று வயிறு உப்பசம் மற்றும் வாய்வுத் தொல்லை ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். 

  •  டீக்கு பதிலான தண்ணீரில் சோம்பை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வரலாம். அது ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்