நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

க்ரிஷ் படத்தின் நாயகன் ரித்திக் ரோஷன் ஸ்டைலில் மரம் ஏறும் மனிதர் : வைரலாகும் வீடியோ!

 இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட மிக சிறிய நேரத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு வருகிறது. இணையவாசிகள் மிக ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும் பல்வேறு கருத்துகளை ஷேர் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.


ரித்திக் ரோஷனை போன்று அதிவேகமாக மரம் ஏறும் மனிதரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி லைக்குகளை குவித்து வருகிறது.

இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் நடித்த “க்ரிஷ்” படத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பார்த்திருப்போம். அதில் சூப்பர் ஹீரோவாக நடித்த அவர் தன்னுடைய அசாதாரணமான சக்திகளை பயன்படுத்தி பல்வேறு சாகசங்களை செய்வார். அவ்வாறு ஒரு காட்சியில் அதிவேகத்தில் காட்டில் உள்ள அனைத்து மரங்களிலும் ஏறுவார். அவ்வாறு ஒவ்வொரு மரங்களிலும் ஏறி நம்முடைய பிரியங்கா சோப்ராவை வழியனுப்பி வைப்பார். ஆனால் ஸ்மார்ட்போன் பிரபலமடையாத அந்த காலகட்டத்தில் இது போன்ற மரம் ஏறுவதும், இறங்குவதும் தான் அப்போதைய குழந்தைகளுக்கு பொழுது போக்காக இருந்தது.

அந்த சமயத்தில் சிறியவர்களாக இருந்த 90ஸ் கிட்ஸ் பலரும் இந்த காட்சியை பார்த்துவிட்டு நாமும் இதேபோன்று மரம் ஏற வேண்டும் என்று நினைத்து எலும்புகளை உடைத்து கொண்டது நினைவிற்கு வரலாம். சிலர் இந்த அளவு மிகப்பெரிய மரங்களில் ஏற முயற்சிக்காவிட்டாலும், நம்முடைய வீட்டு வாசல் கதவுகளின் மீதாவது ரித்திக் ரோஷனை போன்று ஏற முயற்சி செய்திருப்போம். ஆனால் உண்மையிலேயே இந்த வீடியோவில் வரும் நபரோ அப்படிப்பட்ட எந்த வித சூப்பர் ஹீரோ சக்திகளும் இல்லாமலேயே இவ்வளவு வேகமாக மரம் ஏறுவதையும், அதை விட அதிக வேகத்தில் இறங்குவதையும் செய்கிறார்.

இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட மிக சிறிய நேரத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு வருகிறது. இணையவாசிகள் மிக ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும் பல்வேறு கருத்துகளை ஷேர் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதில் டீ சர்ட், அணிந்த நபர் மிகச் சாதாரணமாக ஒரு மரத்தின் உச்சியில் ஏறுகிறார். சிறிது நேரம் மரத்தின் உச்சியில் இருந்து காட்சிகளை ரசித்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு எந்தவித சிரமமும் இன்றி தனக்கு கீழே உள்ள கிளைகளை பிடித்து கீழே இறங்குகிறார்.

டார்ஜான் தொடரில் எவ்வாறு அந்த கதாபாத்திரம் மிக வேகமாக அடுத்தடுத்த கிளைகளை பற்றி கொண்டு இறங்குமோ, அதே பாணியில் அன்ஹா கிளைகளை மிக லாவகமாக பிடித்து இறங்குகிறார். அவர் ஏறுவதை விட அடுத்தடுத்த கிளைகளைப் பிடித்து மிகச் சாதாரணமாக இறங்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதைப் பார்த்த இணையவாசிகள் ”உண்மையான பாகுபலி” என்று பாகுபலி படத்தில் வரும் பின்னணி இசையினை இதனுடன் சேர்த்து பகிர்ந்து வருகின்றனர்.. வேறு ஒருவறோ இவர் பாகுபலி அல்ல க்ரிஷ் படத்தில் வரும் கிருஷ்ணா என்றும் மாறி மாறி தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் இந்தியாவின் டார்ஜான் என்றும் மாடர்ன் மௌக்லி என்றும் இந்த வீடியோவை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.


ALSO READ : ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ.. நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட் - விண்வெளி அனுபவம் விரைவில் துபாயில்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்