சாக்லேட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா?
- Get link
- X
- Other Apps
டார்க் சாக்லேட் போன்ற கோகோ டெரிவேட்டிவ்களில் 70%க்கும் அதிகமாக பாலிஃபினால்கள் உள்ளன, அவை நமது உடலில் நல்ல கொழுப்பை (ஹெச்டிஎல்) அதிகரிக்க உதவுகிறது.
- ஹெச்டிஎல் என்பது நல்ல கொலஸ்ட்ரால், எல்டிஎல் என்பது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும்.
- சில மருந்துகள் மூலம் நம்மால் கொலஸ்ட்ராலை குறைக்கவும் முடியும்.
- டார்க் சாக்லேட் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிபுரிகிறது.
கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு தேவையான ஒன்று, ஆனால் நமது உடலுக்கு எந்த கொலஸ்ட்ரால் அவசியமானது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஹெச்டிஎல், எல்டிஎல் என்று இருவகை கொலஸ்ட்ரால் உள்ளது, இதில் ஹெச்டிஎல் என்பது நல்ல கொலஸ்ட்ரால், எல்டிஎல் என்பது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். அதே சமயம் எந்த கொலஸ்ட்ராலாக இருந்தாலும் சரி அவை மிதமான அளவில் தான் உடலில் இருக்க வேண்டும், அளவுக்கு மீறினால் ஆபத்து உங்களுக்கு தான். உங்கள் மொத்த கொழுப்பு 200 மற்றும் 239 mg/dL க்கு இடையில் இருந்தால், அது கொஞ்சம் அதிகமானதாக பார்க்கப்படுகிறது. இது 240 mg/dL ஐ விட அதிகமாக இருந்தால் அதிகமாகக் கருதப்படுகிறது. உங்கள் எல்டிஎல் கொழுப்பு 130 மற்றும் 159 mg/dL க்கு இடையில் இருந்தால், அது கொஞ்சம் உயர்வாகக் கருதப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment