Weight Loss Tips | தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல நாட்களாக சாப்பிட்டு, சாப்பிட்டு கூட்டிய உடல் எடையை சில நாட்கள் உடற்பயிற்சி செய்தவுடனே குறைந்துவிட முடியாது. உடல் எடையை கூட்ட ஆன நாட்களை விட குறைக்க கூடுதலான கால அவகாசம் தேவைப்படும். தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைக்க விரும்பு நபர் என்றால், உணவில் சில மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும். எனவே தான் தயிரை வைத்து உடல் எடையை குறைக்க உதவும் 5 அற்புதமான உணவு வகைகளை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.
தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தயிரில் பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தேவையற்ற ஆரோக்கியமில்லா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க செய்கிறது. எனவே ஆரோக்கியமான மற்றும் எளிமையான 5 உணவு வகைகள் இதோ...
1. ஓட்ஸ் தாஹி மசாலா : உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கான சிறந்த காலை மற்றும் இரவு உணவாக ஓட்ஸ் உள்ளது. வெயிட் லாஸ் பிரியர்களுக்காகவே பல வகையான ஓட்ஸ் ரெசிப்பிக்கள் உள்ளன. ஆனால் தயிரைக் கொண்டு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் தாஹி மசாலாவை வெறும் 20 நிமிடங்களில் தயார் செய்து சாப்பிடலாம்.
2. தாஹி சென்னா : புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த வேகவைத்த கொண்டைக் கடலையுடன் தயிர் கலந்து தயாரிக்கப்படும் தாஹி சென்னா மிகவும் பிரபலமான சாட் வகையாகும். தயிர், சென்னாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், சில்லி பிளக்ஸ், உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சுவையான மசாலா தாஹி சென்னா செய்து சாப்பிடலாம்.
3. லோ ஃபேட் தாஹி சிக்கன் : காலை உணவு மற்றும் சிற்றுண்டிக்கு மேலே உள்ள ரெசிபிக்கள் ஓகே, மதிய உணவிற்கு என்ன சாப்பிடுவது என குழப்பமாக இருப்பவர்கள் குறைந்த கொழுப்புள்ள கோழிக்கறியுடன் தயிர் சேர்த்து சமைக்கப்படும் லோ ஃபேட் தாஹி சிக்கனை முயற்சித்து பார்க்கலாம். அதிக புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட இந்த மெனு உங்கள் உடல் எடையை குறைப்பதோடு, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான புரோட்டினையும் கொடுக்கிறது.
4. மிக்ஸ் வெஜ் ரைதா : மதிய உணவிற்கு சைடு டிஸ் போன்ற இது உடல் எடைக்கு ஏற்றது ஆகும். தயிர் உடன் நறுக்கப்பட்ட வெங்காயம், தங்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி தழைகள், உப்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை ருசி பார்க்கலாம்.
5. பிளக்ஸ் சீட் ரைதா : ஓட்ஸை போலவே பிளக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதைகளும் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த தயிருடன் செய்யப்படும் ரைதா ரெசிபி சுவையாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் ஆளி விதைகளில் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது.
Comments
Post a Comment