நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விமான வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி செய்யும் இளம்பெண் - வார வருமானம் எவ்வளவு தெரியுமா?

 ஸ்மார்ட் ஒர்க்குக்கும் டெலிவரி ஆப்களில் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதற்கும் அட்லாண்டா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


கடின உழைப்புடன் புத்திசாலித்தனத்தை இணைத்து வாரம் £1000 (ரூ. 90 ஆயிரம்) வருமானம் ஈட்டி வரும் 22 வயது பெண் இணைய வாசிகளை கவர்ந்துள்ளார்

அட்லாண்டா மார்ட்டின் என்ற 22 வயதான இளம் பெண் மூன்று டெலிவரி ஆப்களில் வேலை செய்வதன் மூலம் வாரத்திற்கு £1000 (ரூ. 90 ஆயிரம்) சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.

அனுபவமுள்ள பல கார்ப்பரேட் தொழிலாளர்களின் சம்பளத்தை விட இது அதிகம் என யோசிக்கிறீர்களா?


ஸ்மார்ட் ஒர்க்குக்கும் டெலிவரி ஆப்களில் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதற்கும் அட்லாண்டா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

LadBible அறிக்கையின்படி, 22 வயதான அவர், டெலிவரி டிரைவராக 11 மணி நேர ஷிப்ட்களைச் செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்து, கடந்த ஆண்டு flight dispatcher வேலையை விட்டுவிட்டதாகக் கூறினார்.

அட்லாண்டா, அவரது காதலன் உதவியுடன் 24 மணிநேரம் தொடர்ச்சியாக பேக்கேஜ்களை வழங்குவதற்கான சவாலை எதிர்கொண்டனர். இதன் மூலம் வாரத்திற்கு £1000 (ரூ. 90 ஆயிரம்) சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.


தற்போது, ​​அட்லாண்டா Just Eat, UberEats, Beelivery, Deliveroo மற்றும் Gopher போன்றவற்றின் டெலிவரி வேலைகளை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று ஒரே நேரத்தில் ஸ்விக்கி, ரேப்பிடோ மற்றும் டன்சோ நிறுவனங்களில் வேலை செய்யும் நபர் இணையத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!