கொரிய பெண்கள் மாதிரி கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த 4 பொருட்களே போதும்!
- Get link
- X
- Other Apps
பொதுவாக கொரியப் பெண்களின் சருமம் பார்ப்பதற்கு மிருதுவாகவும், பளபளப்பாகவும் கண்ணாடி காட்சியளிக்கும்.
இத்தகைய சருமத்தைப் பெறுவதற்கு அவர்கள் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
அத்தகைய பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு நாமும் கண்ணாடி போன்ற சருமத்தை பெற முயற்சிக்கலாம்.
1 கப் ஓட்ஸ், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும். இதன் மூலம் உருவாகும் கெட்டியான பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவவும். பின் 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளி சாற்றை எடுத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சை சாறு 2 துளிகள் விட்டு கலக்கவும். இந்த பேக்கை உங்கள் முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். சுமார் 10-12 நிமிடங்கள் உலர விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தினமும் ஒன்று அல்லது 2 முறை செய்யலாம்.
ஒரு கப் அரிசியை தண்ணீரில் கழுவி அழுக்கு அல்லது தூசுக்களை அகற்றவும்.பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் ஊற வைக்கவும். சுமார் 4 மணி நேரம் கழித்து அதனை எடுத்து அரிசி நீரை ஒரு சுத்தமான கிண்ணத்தில் வடிகட்டவும். இந்த அரிசி நீரை முகத்தில் நேரடியாகத் தெளிக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், குளித்த பிறகும், மிருதுவான, குறைபாடற்ற மற்றும் பளபளப்பான சருமத்திற்காக முழு உடலிலும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம். மேலும் முகப்பரு பாதிப்பு அல்லது எண்ணெய் சருமம் இருந்தால் தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் சேர்க்கலாம். அதேபோல் வறண்ட சருமத்திற்கு ஒரு டீஸ்பூன் ஜெரனியம் எண்ணெயைச் சேர்க்கலாம்.
அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை, அரை டீஸ்பூன் பழுப்பு சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 3 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதைப் பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்.
ALSO READ : எள்ளு விதைகளை இப்படி பயன்படுத்தி பாருங்க! முகம் ஒரே இரவில் பளபளப்பாகுமாம்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment