ஞாபக சக்தியை மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் விளாம் பழம் ஜூஸ்! இனி இப்படி செய்து குடிங்க...
- Get link
- X
- Other Apps
எடையை குறைக்க தினமும் விளாம் பழம் சாப்பிடலாம். விளாம் பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது.
சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுத்துகிறது.
பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெறவும் செய்கிறது.
விளாம் பழம் சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் பானம் செய்து அருந்தலாம்.
தேவையான பொருட்கள்
- விளாம்பழம் - 1
- வெல்லம் – 100 கிராம்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- புதினா இலை – சிறிதளவு
- தண்ணீர் – 2 தம்ளர்
செய்முறை
விளாம்பழத்தின் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
1 தம்ளர் குளிர்ந்த நீரில் வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
இந்த வெல்லக் கரைசலை விளாம்பழ விழுதில் ஊற்றி நன்றாக கலந்து வடிகட்டவும்.
மீதமுள்ள தண்ணீரரில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
சுவையான விளாம்பழ ஜூஸ் ரெடி .
ALSO READ : காரசாரமான மீன் மிளகு மசாலா வீடே மணக்கும் சுவையில் செய்வது எப்படி?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment