தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- Get link
- X
- Other Apps
பொதுவாக மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம்.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல் ,மனம், மூளை ஆரோக்கியம் பெறும்.
அதுமட்டுமின்றி உடலுக்கு பல வகையில் ஆரோக்கியம் அளிக்கின்றது. அந்தவகையில் தியானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
தியான நிலை ஆழமாக இருக்கும்போது, தியானம் முடிந்த பின்னரும் தியானத்தின் விளைவு சில நிமிடங்களுக்கு தொடர்கிறது.
உடல் நிதானமாக இருந்தாலும் மனம் எச்சரிக்கையாக இருக்கிறது. இது முழுமையான ஓய்வு அளிக்கிறது
தியானம் ஒருவரின் உள்ளுணர்வுத் திறனை அதிகரிக்கிறது.
உடலில் ஆக்ஸிஜன் நுகர்வு வீதம் குறைகிறது. ஆகையால், உடலியல் ரீதியாக ஒருவர் ஆறு அல்லது எட்டு மணிநேர தூக்கத்திலிருந்து பெறுவதை விட அந்த சில தியான நிமிஷங்களில் ஆழமாக ஓய்வு பெறுகிறார். இருப்பினும், தியானம் தூக்கத்திற்கு மாற்றானது அல்ல.
சீரான வழக்கமாக மேற்கொள்ளும் தியானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மனம் எச்சரிக்கையாக இருக்கிறது, புத்தி கூர்மையாகிறது.
நல்ல ஆரோக்கியமும் நிதானமான மனமும் இயல்பாகவே உற்சாகத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும்.
ALSO READ : 1 கப் பிளாக் டீயில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment