நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா..? நீங்கள் தூங்கும் பொசிஷன் கூட காரணமாக இருக்கலாம்..!

 சரியான தூக்க நிலை என்பது நம் தலையிலிருந்து இடுப்பு எலும்பு வரை சீரான தோற்றத்தில் இருக்க வேண்டும். அதாவது முதுகெலும்பு நடுநிலையான தோற்றத்தில் இருக்க வேண்டும்.


தூக்கமின்மை என்பது பிரச்சனையாக இருந்தது போய் இப்போது நீண்டகால நோய் என்றே அழைக்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் தூக்கமின்மை பிரச்சனை அதிகரித்துவிட்டதாக ஆய்வுகளும் கூறுகின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய பிரச்சனையாகவும் மாறியுள்ளது. இதை சரி செய்வது மருந்து மாத்திரைகளால் மட்டும் சாத்தியமல்ல. நம் வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதோடு தூக்கமின்மைக்கு நாம் எப்படி தூங்குகிறோம் என்பதும் அவசியம்.

ஆனால் இது பலருக்கும் தெரிவதில்லை என்கிறார்  எலும்பியல் நோய் மருத்துவர் செந்தில் குமார். இதை மூத்த எலும்பியல் நோய் அலோசகர் யோகேஷ் குமாரும் உறுதி செய்துள்ளார்.

அவர் பேசியதில் “ நாம் தூங்கும் பொசிஷன் தவறாக இருந்தால் அது தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. அதோடு போதுமான தூக்கமின்மை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகி வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

சரியான தூக்க நிலைதான் என்ன..?

சரியான தூக்க நிலை என்பது நம் தலையிலிருந்து இடுப்பு எலும்பு வரை சீரான தோற்றத்தில் இருக்க வேண்டும். அதாவது முதுகெலும்பு நடுநிலையான தோற்றத்தில் இருக்க வேண்டும்.

National Library of Medicine வெளியிட்டுள்ள ஆய்வின் படி குழந்தைகள் விட்டத்தை பார்த்தபடி நிமிர்ந்தவாறு தூங்குதல் மற்றும் பக்கவாட்டில் சாய்ந்து தூங்குதல், கவிழ்ந்து படுத்த என அனைத்து நிலைகளிலும் மாறி மாறி தூங்குவார்கள். பெரியவர்களாக இருக்கும் பட்சத்தில் பக்கவாட்டில் சாய்ந்தபடி தூங்குதல் அல்லது நிமிர்ந்தபடி முதுக்குப்புறம் தூங்குதலை விரும்புவார்கள்.


பக்கவாட்டில் தூங்கும் நிலை :

பெரும்பாலும் பெரியவர்கள் பக்கவாட்டில் சாய்ந்தபடி தூங்குவதையே அதிகமாக விரும்புவார்கள். காரணம் இதுதான் இருப்பதிலேயே மிகவும் சௌகரியமான நிலை என்கிறார் மருத்துவர் செந்தில். ஏனெனில் இந்த நிலையில்தான் நம் முதுகெலும்பு நடுநிலையில் சீரான தோற்றத்தில் இருக்கும் என்கிறார். நம் மெத்தையும் சீரான நிலையில் இருக்க வேண்டும் இல்லையெனில் கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி வரும் என்கிறார்.

விட்டத்தை பார்த்தபடி நிமிர்ந்து தூங்கும் நிலை : 

பலரும் விட்டத்தை பார்த்தபடி நிமிர்ந்து படுப்பார்கள். இதுவும் பொதுவான தூங்கும் நிலைதான். இப்படி தூங்கும்போதும் உங்கள் முதுகுத் தண்டுவடம் நடுநிலையான தோற்றத்தில் இருக்கும். உங்களுக்கு மற்ற காரணங்களால் கழுத்து, தோள்பட்டை வலி இருந்தாலும் இந்த பொசிஷனில் தூங்கும்போது சரியாகும் என்கிறார். அதோடு தலையணையால் தலையை உயர்த்தி படுக்கும்போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சனைகளைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்கிறார்.

தவறான தூங்கும் நிலைகள் :

மருத்துவர் செந்தில் ”வயிறும் , மார்பும் தரையில் படும்படி குப்புற கவிழ்ந்து படுப்பது கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்கிறார். ஏனெனில் கவிழுந்து படுக்கும்போது நுரையீரலுக்கு அதிகமான அழுத்தம் உண்டாகும். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் தூக்கம் தடைபடும்” என்கிறார்.


அதேபோல் தலையணையால் தலை உயரும்போது முதுகுத்தண்டு வடம் சீரான நிலையில் இருக்காது. இதனால் முதுகுக்கு தேவையற்ற தொந்தரவாக இருக்கும். இதனால் முதுகுவலி, அடி முதுகு வலி , கழுத்து வலி உண்டாகும். இந்த நிலையில் இரத்த ஓட்டமும் குறையும் என்பதால் அடிக்கடி நீங்கள் எழுந்துகொள்ள நேரிடும். தூங்கினாலும் அது நிம்மதியான உறக்கமாக இருக்காது.

அடுத்ததாக இரண்டாது மோசமான நிலை கருவில் குழந்தை தூங்கும் நிலை போல் தூங்குதல். இது முதுகு தண்டு வடத்திற்கு ஆபத்தான நிலை என எச்சரிக்கிறார் மருத்துவர். இது பல வகையான முதுகு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்.

கர்ப்பிணிகள் தூங்க சரியான நிலை எது..?

கர்ப்பிணிகள் பக்கவாட்டில் சாய்ந்தவாறு படுப்பதே சரியான நிலையாகும். விட்டத்தை பார்த்தபடி தூங்குதல் மிகவும் தவறான நிலை என்கிறார் மருத்துவர் செந்தில்.


காரணம் இது வயிற்றில் அசௌகரியத்தை உண்டாக்கும். அதேபோல் அவ்வாறு தூங்கும்போது மயக்க உணர்வு, தலை சுற்றுதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதோடு கருவில் உள்ள குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அதோடு முதுகு வலி, மூச்சுவிடுவதில் சிரமம், செரிமானப் பிரச்சனை, குறை இரத்த அழுத்தம் மற்றும் குழந்தைக்கும் , உங்களுக்கும் மோசமான இரத்த ஓட்டம் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்