அழகான கால்கள், பாதங்களை பெற வேண்டுமா? சில எளிய வழிகள் இதோ....
- Get link
- X
- Other Apps
நம் முகத்தை எவ்வளவு அழகாக பார்த்துக்கொள்கிறோமோ அதே போல் நம் கால் பாதங்களையும் அழகாக கவனித்து கொள்ள வேண்டும்.
அதற்காக அழகு நிலையங்களுக்கு செல்லவேண்டிய தேவையில்லை.
வீட்டில் இருந்தப்படியே எளிய முறையில் இதனை சரி செய்யலாம். அந்தவகையில் நம் வீட்டிலேயே பாதங்களை எப்படி அழகு படுத்தலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால்(legs) வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.
கடுகு எண்ணெயை தினமும் கால்(legs) பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில்(legs) தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.
வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில்(legs) தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.
பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.
சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள்(legs) உயிர்ப்புடன் மின்னும்.
ALSO READ : கொரிய பெண்கள் மாதிரி கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த 4 பொருட்களே போதும்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment