“என்ன வித்தயா காட்டுறீங்க“.? வெயிட்டர் இப்படித்தான் டஜன் கணக்கில் தட்டுக்களை சுமந்து செல்ல வேண்டுமோ.? வைரல் வீடியோ
- Get link
- X
- Other Apps
Viral Video | ஹோட்டலில் பணிபுரிந்த வெயிட்டர் ஒருவர், ஒரு பெரிய தட்டில் 10க்கும் மேற்பட்ட தட்டுகளை அடுக்கி வைத்து தோலில் சுமந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இப்படி பணிசெய்யும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதோடு இதெல்லாம் தேவையில்லாத வேலை என நெட்டிசன்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக வாரத்தின் 6 நாள்களும் அயராது உழைப்பார்கள். ஒருநாள் விடுமுறை என்றாலும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வது முதல் அந்நாள் முழுவதும் 3 வேளையும் ஹோட்டலில் சாப்பிடுவார்கள். இதோடு திருமண நாள், பிறந்த நாள், என அனைத்து விசேஷங்களுக்கு ட்ரீட் கொடுக்கும் நண்பர்களும் ஹோட்டலுக்குத் தான் அழைத்து சென்றுவிடுவார்கள். விதவிதமான டிஸ்களோடு வாடிக்கையாளர்களுக்கு விருந்தை வழங்கினாலும் வாடிக்கையாளர்களின் சேவையை முறையாக செய்யவில்லை என்றால் அத்தனையும் வீணாகிவிடும்.
பொதுவாக உணவகங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் சேவை என்பது முக்கியமான ஒன்று. ஹோட்டலில் பணியாற்றும் வெயிட்டர் கொஞ்சம் வேலையில் கவனக்குறைவோடு இருந்தாலும் முழு வணிகத்தையும் பாதிக்க நேரிடும். இந்த சூழலில் தான் பல உணவக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இரவு நேர ஹோட்டல் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக வண்ணமயமான விளக்குகள், பலூன்களைக் கட்டி வைத்து அலங்கரிப்பார்கள். இதோடு ஹோட்டலில் பணிபுரியும் வெயிட்டர்களும் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இது போன்ற சூழலில், ஹோட்டலில் பணியாற்றிய வெயிட்டர் ஒருவர் செய்த பணி சோசியல் மீடியா பயனர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன செய்தார் தெரியுமா? “ஹோட்டலில் சமைக்கும் அறையில் வாடிக்கையாளர்கள் என்னென்ன உணவு பொருள்களைக் கேட்டார்களோ? அதையெல்லாம் தனித்தனி ப்ளேட்டில் வைக்கிறார். பின்னர் ஒரு பெரிய தட்டில் ஒவ்வொரு ப்ளேட்டையும் அழகாக அடுக்கி வைத்துக் கொள்கிறார். சுமார் 10 தட்டுக்களுக்கும் மேல் அடுக்கி வைப்பதோடு அதனை லாவகமாக தன்னுடைய தோளில் வைத்து சுமந்து செல்கிறார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment