எலிசபெத் மகாராணிக்கு பிறகு கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு போகும்?
- Get link
- X
- Other Apps
கோஹினூர் வைரமானது 1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு ராணி எலிசபெத்துக்காக உருவாக்கப்பட்ட பிளாட்டினம் கிரீடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது 96வது வயதில் வியாழக்கிழமை காலமானார். தனது 70 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு வைர விழா கொண்டாடிவிட்டு இறந்துள்ளார்.
அவருக்கு பின் அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக உள்ளார். இந்நிலையில் மகாராணியின் கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு போகும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
கோஹினூர் என்பது வரலாற்றில் முக்கியமான 105.6 காரட் வைரமாகும். இந்த வைரமானது 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக பல மன்னர்கள் கைகளில் மாறி, 1849 ஆம் ஆண்டில், பஞ்சாப்பை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு, வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை வெட்டி இங்கிலாந்தின் அரச மகுடத்தின் சிறப்பாக சேர்த்தனர். அப்போதிருந்து, இது ஆங்கிலேயர்களின் கிரீடத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment