நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தேவையற்ற கவலைகள் உடல் நலனையும் பாதிக்கும் : மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்....

 மோசமான உணவு தேர்வுகள், அதிக அளவு மன அழுத்தம், மது பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் அதிகப்படியான கஃபின் ஆகியவை மோசமான மன ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் காரணிகளாகும்.


உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்பது எப்போதுமே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இன்றைய கால கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை போன்றே மன ஆரோக்கியமும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால், நம்மில் பலர் மன ஆரோக்கியத்தை கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை. இது பல வகையில் சிக்கலை நமக்கு தர கூடும். அதே போன்று நமது வாழ்க்கையையே மோசமான நிலைக்கு தள்ள கூடிய ஆற்றல் மனதிற்கு உள்ளது.

எனவே எப்போதும் மன ஆரோக்கியத்தை சீரான முறையில் வைத்து கொள்ள வேண்டும். இது குறித்து பல நிபுணர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இன்று ஓரளவு மன ஆரோக்கியம் எதற்காக முக்கியம், எப்படி அதை கவனித்து கொள்ள வேண்டும் என்பதை குறித்த தேடலை மக்கள் தொடங்கி உள்ளனர். பொதுவாக உடல் நலனை பாதுகாத்து கொள்வது போன்று தான் மன நலனை பாதுகாப்பதும்.

நீங்கள் சிரமப்படும்போது அல்லது சோர்வாக இருக்கும்போது, ​​பயப்படும்போது அல்லது வருத்தமாக இருக்கும்போது மட்டும் அல்ல, எல்லா நேரங்களிலும் மன நலனை பேணி காக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் போலவே, அதையும் நாம் தொடர்ந்து கருத்தில் கொள்ள வேண்டும். நமது மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது தினசரி அடிப்படையில் நாம் செயல்படுவதை எளிதாக்குகிறது. மேலும் இது பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.


மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்:

மன ஆரோக்கியத்தை சீரான முறையில் வைத்து கொண்டால், மன அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது. மேலும் பகுத்தறிவு சிந்தனைக்கு இது பெரிதும் உதவுகிறது. அதே போன்று சுயமரியாதை சிந்தனைக்கும் இது உதவுகிறது. வாழ்க்கையில் சமநிலையை உருவாக்க மன ஆரோக்கியம் உதவுகிறது. இப்படி பல வகையில் உங்களின் மன ஆரோக்கியம் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜியின் கூற்றுப்படி, "ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்று கூறுகிறார். மோசமான உணவு தேர்வுகள், அதிக அளவு மன அழுத்தம், மது பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் அதிகப்படியான கஃபின் ஆகியவை மோசமான மன ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் காரணிகளாகும். அதன்படி, உடலில் ஏற்படும் எந்தக் குறைபாடும் மூளையை நேரடியாக பாதிக்கிறது. மேலும் உங்கள் உணவு பழக்கத்தை நன்றாக சரிசெய்வதன் மூலம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு உதவலாம்.


உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சில உதவிக்குறிப்புகளை பின்பற்றலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சத்தான காலை உணவை சாப்பிடுவது நல்ல பலனை தருமாம். மேலும் அதிகப்படியான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் உணவைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். முக்கியமாக மது, புகையிலை மற்றும் காபி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பல வகையில் மூலையில் செயல்திறனை பாதிக்க கூடும் என்பதால் தவிர்க்க சொல்கின்றனர். உணவை பொறுத்த வரை, புரதம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். இது எல்லா வகையிலும் உங்களுக்கு உதவும்.

மேலும், வைட்டமின்-பி சப்ளிமெண்ட்ஸை எடுத்து கொள்ள முயற்சிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேற்சொன்னவற்றை சரியாக பின்பற்றி வருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும், ஆரோக்கியமாக இருக்கலாம். நல்ல மன ஆரோக்கியம் நாம் செய்யும், நினைக்கும், சொல்லும் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்