நீங்கள் பார்த்ததிலேயே பயங்கரமான பேய் படம் என்றால்; எதனைச் சொல்வீர்கள்? சந்திரமுகி, காஞ்சனா, கான்ஜூரிங் அல்லது சிறுவயதில் பார்த்த எதோ ஒரு படமாக இருக்கும். ஆனால், அறிவியல் உலகில் பயங்கரமான பேய் படம் என்று சொல்வது எந்தப் படம்? ஏன்? எனக் காணலாம்.
ஒரு இரவை மறக்க முடியாததாக்க ஒரு எளிமையான வழி இருக்கிறதென்றால் அது கதவுகளை மூடிக்கொண்டு, விளக்குகளை அணைத்துவிட்டு போர்வைப் போர்த்தியபடி ஒரு பேய் படம் பார்ப்பது தான்.
நாம் பல ஜானர்களில் படங்களைப் பார்க்கிறோம். மற்ற ஜானர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருப்பது தான் பேய்ப்படங்கள். சிலருக்கு பேய் படங்களைப் பார்ப்பது அதிக த்ரில்லராக இருக்கும்; சிலருக்கு பேய் படங்கள் என்றாலே ஆகாது.
சரி நீங்கள் பார்த்ததிலேயே பயங்கரமான பேய் படம் என்றால்; எதனைச் சொல்வீர்கள்? சந்திரமுகி, காஞ்சனா, கான்ஜூரிங் அல்லது சிறுவயதில் பார்த்த எதோ ஒரு படமாக இருக்கும். ஆனால், அறிவியல் உலகில் பயங்கரமான பேய் படம் என்று சொல்வது எந்தப் படம்? ஏன்? எனக் காணலாம்.
உலகிலேயே பயங்கரமான பேய் படத்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்காகத் தன்னார்வலர்களை அழைத்து அவர்களிடம் பேய்ப்படங்களைப் காண்பிக்கும் முன்னர் ஹார்ட் பீட் மானிட்டர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தினர்.
டேனியல் கிளிஃபோர்ட், என்பவர் தான் இந்த ஆராய்ச்சிகளுக்குத் தலைமைத் தாங்கியவர்.
ஆராய்ச்சிக்காக IMDB, Rotten Tomatoes, Reddit உள்ளிட்ட தளங்களின் பரிந்துரைகள் அடிப்படையில் 50 பயங்கர பேய் படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
தன்னார்வலர்களுக்கு படங்களைக் காண்பித்து அவர்களை கண்காணித்ததன் மூலம் 2012ல் வெளியான Sinister தான் உலகத்தில் பயங்கரமான பேய் படம் என்று கூறினர்.
Top 10 Scariest Movies Ever
1. Sinister
2. Insidious
3. The Conjuring
4. Hereditary
5. Paranormal Activity
6. It Follows
7. The Conjuring 2
8. The Babadook
9. The Descent
10. The Visit
தன்னார்வலர்களுக்கு சாதாரணமாக இதயத்தின் வேகம் 65 BPM எனில், சினிஸ்டர் படத்தைப் பார்க்கும் போது 86 BPM ஆக இருந்துள்ளது. என ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.
அதிகபட்சமாக Insidious படத்தைப் பார்க்கும் போது ஒரு கட்டத்தில் அவர்களின் இதயத்துடிப்பு 133 BPM -ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் 2020ல் வெளியாகின. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான பேய் படங்களில் ஒரு வேளை இன்னும் பயங்கரமான ஒரு படம் இடம் பெற்றிருக்கலாம்.
Comments
Post a Comment