நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

47 வினாடிகளில் ஹேர்கட்.. ஹேர் ஸ்டைலிஸ்ட் செய்த உலக சாதனை.!

 Guinness World Record | கிரீஸ் நாட்டை சேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவர் வெறும் 47 வினாடிகளில் வேகமாக முடி வெட்டியதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் அசத்தியுள்ளார்.


ஹேர் ஸ்டைலிங் என்பது ஒரு தனித்துவமான கலை. அற்புதமான முறையில் ஹேர் ஸ்டைலை கொண்டு வருவதற்கு நிறைய பொறுமை தேவை. மேலும், அந்த நபருக்கு சரியான முறையில் ஹேர் ஸ்டைல் செய்தால் அது பாராட்டுக்குரிய ஒன்றாக இருக்கும். அதுவே அவருக்கு தவறான ஹேர்ஸ்டைல் செய்துவிட்டால் அவ்வளவுதான். உலக அளவில் பல்வேறு வகையான ஹேர் ஸ்டைல்கள் உள்ளன. அதே போன்று ஆண்-பெண் என பிரித்து பார்த்தால் அதில் மேலும் ஏராளமான வகைகள் கிடைக்கும்.

இவ்வளவு வகைகள் இருந்தாலும், அதை யார் நேர்த்தியாக எவ்வளவு குறைத்த நேரத்தில் ஹேர் ஸ்டைலிங் செய்கிறார்களோ அவர்களே சிறப்பானவர்கள் என்று கூறலாம். இப்படியொரு சாதனையை தான் கிரீஸ் நாட்டை சேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவர் செய்துள்ளார். இவர் வெறும் 47 வினாடிகளில் வேகமாக முடி வெட்டியதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் அசத்தியுள்ளார்.

கிரீஸில் உள்ள ஏதென்ஸைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணரான கான்ஸ்டான்டினோஸ் கௌடோபிஸ், டிரிம்மரைப் பயன்படுத்தி மிக வேகமாக ஹேர்கட் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த முயற்சியை இவர் ​​பிப்ரவரி 2017-இல் செய்துள்ளார். ஹேர் ஸ்டைலிஸ்ட் நிபுணரான இவர் தனது திறமையை வெளிப்படுத்த முயற்சித்து சாதனை படைத்தார். இந்த 3 நிமிட நீளமான வீடியோவின் முதல் பாதியில், நேரம் தொடங்கியவுடன் குடோபிஸ் முடி வெட்ட தொடங்குவதை காட்டுகிறது. மேலும் அவர் முடி வெட்டி முடிக்கும் வரை நிறுத்தாமல் வெட்டி கொண்டே இருப்பதை மீதி நிமிடங்களில் நாம் பார்க்கலாம். சரியாக 47.17 வினாடிகளுக்குப் பிறகு, இந்த ஹேர்ஸ்டைலிஸ்ட் தனது முடி வெட்டுவதை நிறுத்தி அதன் அளவுகளை குறிக்க கின்னஸ் அதிகாரிகளிடம் கைகளை உயர்த்தினார்.

அதன்பிறகு கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரிகள் முடியின் நீளத்தை அளந்து, அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க தொடங்கினர். அவர் சரியாக முடியை ட்ரிம் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின்னர், இவரது பெயர் கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இதை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த பதிவின் கேப்ஷனாக, “விரைவாக டிரிம் செய்ய வேண்டுமா? வெறும் 45 வினாடிகள் இருந்தால் போதும்” என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டுக்கு பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் நிபுணரின் திறமையை குறித்து பலரும் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் இந்த ஹேர்கட் குறிப்பிட்ட ஸ்டைல் ​​இல்லாமல் சீரற்றதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், நெட்டிசன்களில் ஒருவர் கின்னஸ் உலக சாதனை அமைப்பு என்பது நம்பகமான தளம் என்றும், பல தசாப்தங்களாக அந்த அமைப்பு உறுதியான ஒன்றாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த வீடியோவின் இரண்டாம் பாதியில் ஜப்பானைச் சேர்ந்த கெய்ட்டோ கவாஹாரா என்பவரை மையமாகக் கொண்ட ஒரு கிளிப் வருகிறது. உலகில் டீனேஜ் வயதில் நீளமான முடிக்கான சாதனையைப் படைத்தவர் இவர். இவரது முடியின் நீளம் என்பது 155.5 சென்டிமீட்டர் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவின் படி, இவர் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக 18 வயதை எட்டியவுடன் அவரின் முடியை வெட்டி உள்ளார். முடி உதிர்தல் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு விக் தயாரிக்கும் அரசு சாரா நிறுவனத்திற்கு அவரது தலைமுடியை தானமாக வழங்கியதாக கூறியுள்ளார்.


ALSO READ : பயணத்தின் போது பாதியாக பிரிந்த ரயில்..! - இங்கிலாந்தில் அதிகாரிகளை பதறவிட்ட டிக் டாக் யூசரின் வீடியோ...


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!